பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30

அடைந்தார். பின் நேட்டால் துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்து மாட்டு வண்டியில் ஏறி 100 மைல் பிர யாணம் செய்து, 1841-இல் ‘மே திங்களில் 81-ஆம் நாள் குருமன் என்னும் இடத்தைச் சார்ந்தார்.

4. குருமன் என்னும் இடம் பெரிதும் நீக்ரோக் கள் வாழும் இடம். அவர்களைச் சீர்த்திருத்திச் சமய அறிவு புகட்ட எண்ணினர். அதன்பொருட்டு அவர் கள் மொழியை விரைவில் பயின்ருர், அம்மொழியைக் கற்றுக் கொண்டதும், அம்மொழியைக் கொண்டே அவர்கட்குக் கிறிஸ்தவ மதக்கொள்கைகளைப் புகட்டி னர் ; கல்வி அறிவை யூட்டினர். இதல்ை மகிழ்வுற்ற நீக்ரோவர்கள் இவரிடம் பேரன்பும், பேராதரவும் காட்டினர்.

5. லிவிங்ஸ்டன் வேலையின்றி ஓர் இடத்தில் இருப் பவர் அல்லர். இவர் சஞ்சாரம் செய்வதே இயல்பாகக் கொண்டவர். 1848-ஆம் ஆண்டு மாபத்லா என்னும் இடத்தை யடைந்தார். அவ்விடம் இயற்கை எழில் மிக்கு இருப்பதை அறிந்தார். அவ்வழகு இவர் உள்ளத்தைக் கொள்ளே கொண்டது. அவ்விடம் ஒரு பள்ளத்தாக்கு. அந்த இடத்தில் ஒர் இல்லம் அமைத்துக்கொண்டார். அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்பொழுது இவருக்கு ஒரு விபத்து நேர்ந்தது. அதாவது ஒரு சிங்கத் தோடு போராடினர். அச்சிங்கம் இவரது வலத்தோளேக் கடித்து விட்டது. இவர் தப்பியதே தம்பிரான் புண்ணிய மாயிற்று. நல்லவேனேயாக இவருடன் இருந்தவர் அதனைச் சுட்டுக்கொன்ருர். இவர் தோள்புண் ஆறு வதற்குப் பல நாட்கள் சென்றன.