பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

3生

கேள்விகள்

1. லிவிங்ஸ்டன் எங்கு எப்பொழுது பிறந்தார்?

2. இவர் எப்படித் தம் கல்வி அறிவைப் பெருக்கிக்கொண்

டார் ?

3. இவர் வெளிநாடு செல்ல எப்படி வசதி ஏற்பட்டது?

4. இவர் யாரை மணந்தார் ?

பயிற்சி

1. நீக்ரோக்கள் ஆதரவை இவர் எங்கனம் பெற்ருர்

என்பதைக் குறிப்பிடு.

2. இவர் யாரால் எங்கனம் பாராட்டப்பட்டார் என்பதை

விவரி.

3. இவரைப்போலப் புது இடங்கண்ட ஒருவர் பெயரைக்

குறிப்பிடு.

இலக்கணம்

புணர்ச்சி

வேல் + அழகு என்னும் தொடரைச் சேர்த்தால், வேலழகு என்று அல்லவா புணரும். வேல் என்னும் சொல்லில் ஈற்றில் இருக்கும் எழுத்து மெய் எழுத்து; அழகு என்னும் சொல்லின் முதலில் நிற்கும் எழுத்து உயிர் எழுத்து. இவ்வாறு மெய்யும் உயிரும் பெரும்பாலும் இணைந்தே வரும்.

பல்+அழகு இத்தொடரைச் சேர்த்துக் காட்டுங்கள். இத் தொடர் சேரும்போது பல்லழகு என்று சேரும். அப்படிச் சேரும்போது ‘ல்‘ என்னும் மற்ருெரு மெய் இடையே தோன்று கிறது. இதல்ை தனிக் குறிலோடு எந்த மெய் எழுத்து இருந் தாலும், அதனோடு உயிர் எழுத்து முதலாகக் கொண்ட மொழி