பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

z.

姆 1. வாழ்த்து

திருவருட்பா

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே !

காணுர்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே! வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே !

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே! கல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுகின்ற நடுவே !

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே! எல்லார்க்கும் பொதுவில் கடமிடுகின்ற சிவமே !

என்னரசே யான்புகலும் இசையுமணிங் தருளே !

-இராமலிங்க சுவாமிகள்

இப்பாடல் திருவருட்பா என்னும் நூலிலிருந்து எடுக்கப் பட்டது. இதைப் பாடியவர் இராமலிங்க சுவாமிகள் என்பவர். இவரை வள்ளலார் என்றும் கூறுவர். இவர் மருதூரில் பிறந்தவர்; இவர் தந்தையார் இராமய்யப்பிள்ளை; தாயார் சின்னம்மை. இவர் கருணிகர் குலத்தைச் சேர்ந்தவர். இவர் சமயம் சைவம்: இவர் வடலூரில் முத்தியடைந்தார்; இவர் இருந்த காலம் 19-ஆம் நூற்ருண்டு. இவர் எழுதிய வசன நூல்கள் மனு முறைகண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பன.

.

அருஞ் சொல்

களிப்பு - மகிழ்ச்சி. கண் - அறிவு, மதி அறிவு, சுரர் -

தேவர், பொது - சபை,