பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ば

காலம் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார் ; பின்னர் இவர் தென்னுப்பிரிக்கா செல்ல நேர்ந்தது. அங்கு இவர் பட்ட அல்லல் அனந்தம். தாம் படும் அல்லலுடன் அங்கு வாழும் இந்தியர் படும் துன்பங்கள் இவர் உள்ளத்தை உருக்கின. ஆப்பிரிக்க அரசாங்கத்தினர், இந்தியர்களைக் கேவலமாக எண்ணுவதையும் அவர்களுக்குத் தொல்லே தருவதையும் இயல்பாகக் கொண்டு இருந்தனர். இந்த எண்ணத்தை மாற்றி அங்கு வாழும் இந்தியர்களுக்கு நன்மை செய்யக் காந்தியார் உள்ளங் கொண்டார். இதன்பொருட்டு இவர் தம் குடும்பத்துடன் தென்னுப்பிரிக்காவில் சிலகாலம் தங்க உறுதிகொண்டார்.

5. இந்தியர்கள் அனைவரும், தங்களுக்கு ஒரு ரட்சகர் கடவுளால் அனுப்பப்பட்டார் என்று எண்ணிக் காந்தி யடிகளுடன் சேர்ந்து அன்பு காட்டினர். இதல்ை அங்கு சிறிது புரட்சி ஏற்பட்டது. அதனை அடக்கும் பொருட்டு ஆப்பிரிக்க அரசாங்கம் சிலரைக் கொன்று வீழ்த்தியது, சிலரைச் சிறைக் கூட்டத்திற்கும் செலுத்தியது. அக்காலங் களில் காந்தியார் பொறுமையுடனும், சத்தியத்துடனும் நடந்து வந்தார். இந்நிலையில் ஆப்பிரிக்க நாட்டிற்கு ஒரு சோதனைக் காலம் நேர்ந்தது. அதாவது, போயர் போரும் ஜூலு ஜாதியார் கலகமும் ஏற்பட்டன. அப்பொழுது காந்தியார் ஆப்பிரிக்க அரசாங்கத்தாருக்கு உதவி புரிந்து அவர்கள் வெற்றி காணி உடன் இருந்து உழைத்தார். அது முதல் அவ்வரசாங்கம் இவரிடம் அன்பு காட்டித்தொடங்கியது. அதன் விளைவால் ஆப்பிரிக்காவில் இந்தியர் பட்டுவந்த துன்பங்கள் குறையத் தொடங்கின. இதுதான் தக்க தருணம் என்று காந்திப்பெரி யார் ஆப்பிரிக்க அரசாங்கத்தாரிட்மிருந்து இந்தியர் நலன் களைக் குறித்து ஒர் உடன்படிக்கையும் எழுதி வாங்கிக்கொண் i. ssif.