பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இருந்தாலும், வட இந்தியாவில் சிறந்து விளங்கிய ஒரு பெரு நாடாகவே அது திகழ்ந்தது. அந்நாட்டு மன்னராகத் திலீப சிம்மன் என்பவர் அரசு புரிந்து வந்தார். அவருக்கு வாழ்க்கைத் துணைவியராக அமைந்தவரே துர்க்காவதி அம்மையார்.

~,

3. அரசர் திலீபசிம்மனும், அரசியார் துர்க்காவதியம்மை யாரும் கல்லரசு செய்துவந்த காரணத்தாலும், அவர்கள் செய்த புண்ணியத்தின் பயனுலும், அவ்விருவருக்கும் ஓர் ஆண்மகன் பிறந்தான். அவன் பெயர் வீர நாராயணன் என் பது. அந்தோ! மகன் பிறந்த சில நாளில் தந்தையார் திலீப சிம் மன் மண்ணுலகுவிட்டு விண்ணுலகடைந்தார். மன்னர் இறந்த போது மகன் சின்னஞ் சிறுவகை இருந்தான். தந்தைக்குப் பிறகு தனயன் அரசுக்கட்டில் ஏறவேண்டும் என்னும் முறை மைப்படி, வீர நாராயணன் அரியாதனம் அமர இயலவில்லை. ஆகவே, அரச பாரத்தை இராணி துர்க்காவதி அம்மையார் ஏற்க நேர்ந்தது. -

4. துர்க்காவதியம்மையார் பட்டத்திற்கு வந்து செங் கோலைக் கைக்கொண்ட நாள் முதலாக குடிமக்களுக்கு எந்தக் குறையும் நேராவண்ணம் கவனித்து வந்தார். குடி மக் களைக் குழந்தைகளாக எண்ணித் தாம் தாய்போல் இருந்து அவர்கட்கு வேண்டிய தேவைகளை முடித்து வைத்தார். நாட் டுக்கு நீர்வளம் முக்கியமான தல்லவா ? அதன்பொருட்டு ஏரி குளங்களை வெட்டுவித்தார். ஓர் ஊரில் இருந்து மற்ருேர் ஊருக்குப் போகின்றவர்கள் இடையில் தங்கிச் சென்று தம் களேப்பை நீக்கிக் கொள்ளச் சத்திரங்களைக் கட்டிவைத்தார். அச் சத்திரங்களில் உணவு கொடுத்து உதவ, அரிசியும் அளித்து வந்தார். தம் நாட்டில் அறியாமைப்பேய் இருத்தல் கட்டது என்பதற்காகப் பாடசாலைகளை வைத்து அறிவை