பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

பொருள்களே நன்கு அரைத்துக் கூழாக்க வேண்டும். அரைத்துக் கூழாக்குவது கடினம் என்று, இதற்காகவே அமைந்த தாங்கி என்னும் பெயர் அமைந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவர். பின் அக் கூழைச் சுத்தம் செய்து வெண்ணிறமாக்கவேண்டும். அதன் பின் தெளிந்த நீரில் அக் கூழை மற்ருெரு தொட்டியில் கலக்க வேண்டும்.

5. சன்னமான கோரைப் புற்களைப் பாய்போல முடைந்து கொள்ளவேண்டும். இப்பாயைச் சதுரமான மரப் பலகையில் வைத்து, இப்பாய் விலகாதிருக்கச் சட்டம் அடிக்க வேண்டும். இதன் பின் இப்பாய்ச் சட்டத்தைக் கூழ்த் தொட்டியில் தோய்த்து உடனே எடுத்துவிட வேண்டும். எடுத்தவுடன் அதில் தோய்ந்துள்ள நீர் வற்றும்படி அந்தத் தொட்டியின் மேல், இடையே குச்சி வைத்து அமர்த்தி வைக்க வேண் டும். அப்படி வைத்தால் நீரெல்லாம் வற்றிவிடும். அதன் பின் அந்தப் பலகையின் மீது மெல்லிய துணியை விரிக்க வேண்டும். ஒரு மேசையின்மேல் நல்ல துணியை விரித்து, அதன் மேல் கூழ் படிந்துள்ள கோரைப் பாயைக் கவிழ்க்க வேண்டும். மெல்ல கூழ்ப்படலம் மேசையின் மேல் விழும் படி பாய்ப் பலகையை எடுத்துவிட வேண்டும். இந்தக் கூழ்ப்படலமே ஒரு காகித ஏடாகும். இப்படியே நூற்றுக் கணக்கான எடுகளை மேசையின் மேல் அடுக்கி அதன் பின் ஒரு துணியைப் போர்த்த வேண்டும். இத்துடன் காகிதம் முழுவுருப் பெற்றுவிடாது. இவ்வாறு நூறு. இரு நூறு காகிதங்களாக அடுக்கி அதன் மேல் வழவழப்பாயும் கனமும் உள்ள மரச்சட்டத்தை வைக்கவேண்டும். இப்படி வைப் பதன் நோக்கம், அந்தக் கூழ்ப்படலத்தில் சிறிது நீர் இருந் தாலும், மேலே வைக்கப்படுகின்ற கனப்பொருளால் அந் நீர் கசிந்து வெளிவருவதற்கேயாகும். அதன் பின்னும் ஈரக்