பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r) 39

வாடப்படும்? உனக்குத் தேவையான புத்தகத்தை என் பிறர்க்குக் கொடுக்கின்ருய் ! கிழிந்த புத்தகங் கஃாக்கொண்டு நீ என் படிக்கக்கூடாது. புதுப்புத்த சிங்களே வாங்கவேண்டுமோ ?

ாகன் :- தந்தையீர்! நான் கிழிந்த புத்தகங்களை வைத்துக் கொண்டிருந்தால், பள்ளிக்கூடப் பிள்ளைகள் என்ன ஏளனம் செய்யமாட்டார்களோ ? நான் நம் குடும்ப கெளரவத்தைக் காப்பாற்ற வேண்டாவோ ?

தந்தை - நீ உயர்நிலைப் பள்ளியில் இருக்கும்போதே இவ் வாறு பணத்தைச் செலவு செய்ய எண்ணுவாயானல், கல்லூரிக்குப் போனுல் எவ்வளவு செலவு செய்வா யோ! நான் உனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். தினமும் இரண் டணு வேறு கைச் செலவிற்குத் தந்து வருகிறேன். இதனை உன் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு வீண் செலவு செய்து விடுகிருய். போதாக்குறைக்கு உன் தாயாரிடத்திலிருந்தும் பணம் வாங்கிக்கொள்கிருய். இவைகளையும் கடந்து சிறு சில்ல்ரைக் கடனும் வைத் திருப்பதாகப் பள்ளிக்கூடப் பிள்ளைகள் வந்து கூறு கின்றனர். இவ்வளவுக்கும் காரணம் உன்னுடைய வரம்பு கடந்த செலவு அல்லவா? இப்படிச் செலவு செய்துகொண்டு வந்தால், குந்தித் தின்ருல் குன்றும் மாளும் என்பதுபோல, எவ்வளவு பணம் இருந்தாலும் செலவு ஆகிவிடும் அல்லவா? ஆகவே, அருமை மகனே சிக்கனமாக வாழ இளமையிலிருந்தே நீ பழகிக் கொள்ள வேண்டும்.