பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

பகன் :- அப்பா! நான் சிக்கனமாக வாழ என்ன செய்ய வேண்டும்? அதைச் சொல்லுங்கள்; அப்படியே செய் கின்றேன்.

தந்தை :- அன்புள்ள மகனே! நீயே என் அருமை மகன். நான் சொன்னதை உணர்ந்து கொண்டனேயே! நான் சொல்கிறபடி செய். உன் பள்ளிக்கூடத்தில் சேவிங்ஸ் பாங்க் முறை இருக்கும். அதில் நீ சிறு சிறு பணத் தைப் போட்டு வை. இந்தப் பழக்கம் உன் செலவு செய்யும் இயல்பைக் குறைக்கும். சிக்கனத்தைக் கைக் கொள்ளச் செய்யும். இந்தச் சிறு தொகை ஒன்று சேர்ந்து பெருந்தொகையாகி, நீ உன் பள்ளிக்கூட ஆசிரியருடனும், பிள்ளைகளுடனும் எங்கேனும் உல் லாசப்பயணம் போளுல், அப்பொழுது செலவு செய்யப் பயன்படும். தெரிகிறதா?

மகன் :- அப்பா! நீங்கள் சொல்வது எனக்கு இப்பொழுது நன்ருக மனத்தில் பதிந்துவிட்டது. நான் சிக்கனமாக வாழ முற்படுகிறேன். மிகுந்ததைச் சேர்த்து வைக் கிறேன்.

அருஞ் சொற்கள் :

கல்லூரி-மேல்படிப்புக்குரிய பட்டம் பெறுதற்குப் பயிலும் கல்விச் சாலை, வரம்பு-எல்லே.

கேள்விகள்:

சிறுவனுக்கு ஏன் பணம் தேவையாக இருந்தது?

2

அவன் புத்தகங்கள் என்னவாயின?

அவன் வரம்பு கடந்து செலவு செய்கிருன் என்பது எப்படித் தெரிகிறது ? --- -

4. சிக்கனமாக இருந்தால் ஏற்படும் நன்மைகள் யாவை ?