பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

7. எனது உல்லாசப் பிரயாணம்

கெல்லட் உயர்நிலைப் பள்ளிக்கூடம்,

திருவல்லிக்கேணி .52 سیست-8-س-25 آزات آن 36 (3)

என் அருமை இரசமச்சந்திரா,

1. நீ எழுதிய கடிதம் கிடைத்தது. கடிதம் கண்டு மகிழ்ந்தேன். இங்கு யாவரும் நலம். உன் நலத்தையும் உன் பேற்றேர் நலத்தையும் அடிக்கடி எழுதுக. நான் விசேஷமாக இக்கடிதத்தில் எழுதுவதற்கு ஒன்றும் இல்லாமையால், என் ஆசிரியர் என்னையும் என்போன்ற மாணவர்களையும் உல்லா சப் பிரயாணமாகத் திருக்கழுக்குன்றம் அழைத்துச் சென்றது குறித்து எழுதி யிருக்கிறேன். இதைப் படித்த பிறகு உனக் கும் திருக்கழுக்குன்றம் போகவேண்டு மென்ற அவா எழும், என்று நம்புகிறேன்.

2. சென்ற வாரம் அதாவது 15, 16, 17, 18, 19: ஆம் தேதிகளில் எங்கள் பள்ளிக்கூடம் சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் பொருட்டும், ஆவணி அவிட்டம், காயத் திரி ஜபத்தின் பொருட்டும் விடுமுறைக்காக மூடப்பட்டது அந்த ஐந்து நாட்களில் 17, 18, 19-ஆம் தேதிகளில் திருச் கழுக்குன்றம் சென்று வருவதாக முன்பே தீர்மானித்திரு. தோம். அந்தத் தீர்மானப்படி வெள்ளிக்கிழமை கான் 7.மணிக்குச் சென்னைக் கோட்டை இரயில் நிலயத்திற்கு அருகில் இருக்கும் வெளியூர் செல்லும் பஸ் நிலையத்திற்கு வந்தோம். திருக்கழுக்குன்றத்திற்குச் செல்லும் நேர் பள் வில் ஏறிக்கொண்டோம். இரண்டு மணி நேரத்திற்கென் லாம் திருக்கழுக்குன்றத்தை அடைந்தோம். ஒரு சத்திரத்