பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

நோயாளரும், மற்றையோரும்,அதனை நீரில் கரைத்து உடம் பில் பூசிக்கொள்கின்றனர். அதனுல் நோய் நீங்குவதாக நம்பு கின்றனர். நம்பிக்கை நோய் தீர்த்தலும் உண்டு அல்லவா ? பிறகு அதையும் கடந்து வந்தால், சிறு கோயில் ஒன்றைக் காணலாம். அதனைத்திருமலை சொக்கம்மாள் கோயில் என்கின் றனர். அதன் பக்கத்தில் எதிரொலி கேட்கப்படும். ஆகவே, சிலர் அங்கு கின்று ஓசை எழுப்பி எதிரொலி கேட்டு மகிழ் வர். அதனையும் கடந்து வந்தால் நால்வர் கோயில் காணப் படும். அதனையும் கண்டு கும்பிடு போட்டுவிட்டு வந்தால் அடிவாரத்தை யடையலாம். அன்று எங்கள் பொழுது இவ் வாறு கழிந்தது. இரவு உணவுகொண்டு உறங்கினுேம்.

8. மறுநான் கால எங்கு போவது என்பது தெரிய வில்லை. சத்திரக்காரன் திடுமென, "ருத்திராங்கோயில் பார்த் தீர்களோ? என்ருன். அது எங்கிருக்கிறது? என்று ஆவ லுடன் கேட்டோம். அவன் சங்கு தீர்த்தத்திற்குத் தென் கிழக்கு மூலையில் ஒரு பர்லாங் தூரத்தில் இருக்கிறது என் ருன், நாங்கள் சிற்றுண்டி அருந்திவிட்டு அங்கு சென் ருேம். கோயிலைக் கண்டோம். கோயில் மிகவும் பழமையான தாகக் காணப்பட்டது. ஆனால், கவனிப்பார் இன்றிப் பாழ் பட்டுக் கிடக்கிறது. அது கண்டு. வருக்தினுேம். பிறகு திரும்பி வந்த காங்கள், கண்டவற்றை எல்லாம் ஒரு குறிப்பு எடுத்துக் கொண்டோம். இங்கு தங்கினுல் நோய் தீரும் என்றும், குளத்தில் குளித்தாலும் நோய் நீங்கும் என்றும் கூறினர். அவற்றையும் குறித்துக் கொண்டோம். மலையில் பல மூலிகைகள் நிறைந்து இருப்பதால், அம் மூலிகையில் பட்டுக் காற்று வீசப்படுவதாலும், மழை நீரும் அம் மூலிகை களில் படிந்து குளத்திற்கு வருவதாலும் நோய் தீர்தற்கு வசதியுண்டு என்று நாங்களும் நம்பிளுேம். -