பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

8. இந்த உடற்பயிற்சியை அவர் அவர்கள் வயதுக்கேற்ற முறையில் செய்யலாம். செல்வ நிலைக்கேற்ற நிலையில் செய்ய லாம். அரசகுமாரர்கள் தண்டால், பஸ்கி, முதலிய தேகப் பயிற்சியைச் செய்வதோடு, யானை ஏற்றம், குதிரை ஏற்றம் முதலியவற்றைப் பழகலாம். அப்படித்தான் பழகிவந்தனர் நம் நாட்டு அரச இளைஞர்கள். நாட்டுப்புறங்களில் உள்ளவர் ஏற்றம் இறைப்பதன் மூலமும் தம்மையறியாமல் தேகப் பயிற்சியைச் செய்து வருகின்றனர். கடினமான தேகப் பயிற்சிகளைச் செய்ய முடியாதவர்கள் காலை மாலைகளில் இரண்டு கல் தொலைவு உலாவி வரலாம் ; தோட்டவேலைகளைச் செய்யலாம்.

9. தேகப்பயிற்சியைச் செய்வதற்குரிய நேரம் காலே யும் மாலையும் ஆகும். அப்பொழுதுதான் சோர் காட்டாது. சூரியனுடைய வெம்மை தாக்காது பகற்பொழுது செய்வது சோர்வை மிகுதியும் தரும் நேரமாகும். இரவில் செய்வது தளர்ச்சியைத் தருவதாகும். ஆகவே, தேகப்பயிற்சியைக் கால மாலையில் சேய்வதே உசிதமாகும். காலை மாலைகளில் தேகப்பயிற்சி செய்யவேண்டும் என்பதை மட்டும் மனத்தில் கொண்டு, இருட்டறையிலும், காற்ருேட்டம் இல்லாத இடங் களிலும் தேகப்பயிற்சியைச் செய்வது, குளிக்கப்போய்ச்

சேற்றைப் பூசிக் கொள்வதற்குச் சமமாகும்.

10. ஆகவே, அருமை மாணவர்களே, நீங்கள் உண் மையில் தாய் காட்டுப் பற்றுடையவர்களானல், நம் தாய் நாட்டுக்கு உங்கள் கடமையை ஆற்றவேண்டுமென எண் ணங் கொண்டவர்களானல், உடல் உரம்பெற முந்துங் கள். தேகப்பயிற்சியை இடைவிடாமல் செய்து வாருங்கள். உடற்பயிற்சி வகுப்புக்களுக்குத் தவருமல்போய் உடற்பயிற்