பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அப்பனே! தாயே என்போம்!

அவரையே துதிக்க வேண்டின், ஒப்பனை உளதோ வேலை -

உலகின்கண் புலனில் தோன்றும் செப்பரும் வெய்வம் அன்னர்

சேவடி போற்ருய் நெஞ்சே!

-மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

நாட்டுப் பாடல் 6. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே-அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே-இதை வந்தனைகூறி மனத்தில் இருத்தியென்

வாயுற வாழ்த்தேனே!

-பாரதியார்.

குறிப்புரை :

1. திருஞானசம்பந்தர் : சீர்காழிப்பதியில் அந்தணர்குலத்தில் கி. பி. ஏழாம் நூற்றண்டில் பிறந்தவர். இவர் மூவாண்டிலேயே பாடல் படும் வன்மையைப் பெற்றவர். இவ்வன்மை உமாதேவியார் கொடுத்த ஞானப்பால் உண்டதல்ை ஏற்பட்டது. அதஞலேயே இவர் ஞானசம்பக் தன் என்று அழைக்கப்பட்டார். இவரும் திருநாவுக்கரசரும் திருவிழிமிழல் என்னும் இடத்தில் இருந்தபோது பஞ்சம் வரவே, அப்பஞ்சம் நீங்கும் வரை படிக்காசு தந்தனர் சிவபெருமான். அக்காசு வட்டம் பெற்று 16:றிவந்ததால், வட்டம் பெருத கர்சுவேண்டி இப்பாடலைப் பாடினர். இப்படல்கள் சம்பந்தர் தேவாரத்தில் உள்ளவை.