பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

கேள்விகள் : 1. பகவன் உலக முதல்வன் என்பது எந்த உதாரணத்தால்

விளக்க்ப்பட்டுள்ளது ?

2. இல்லறத்தான் தன் வருவாயை எவ்வெவர்க்குப் பகுத்து

உண்ண வேண்டும் !

3. நற்பெண்ணின் இயல்பு யாது? 4. நயனுடையான் செல்வம் எப்படிப் பயன்படும் ? 5. நாம் ஏன் பிறர்க்குத் தீங்கு செய்தல் கூடாது? 6. எவ்வெச் செருக்கை ஒழிக்க வேண்டும்?

பயிற்சி : 1. விசும்பின் துளி அன்பிலார் எல்லாம் சொல்லுக சொல் லில் மழித்தலும் கீட்டலும் முறைசெய்து காப்பாற்றும்என்று தொடங்கும் குறட்பாக்களின் கருத்தைக் குறிப்பிடு. 2. ஒல்லும் ஆகையால் அகன் அமர்ந்து, அழுக்காறென, ஒன்னர்த் தெறலும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும்:என்று தொடங்கும் குறட்பாக்களுக்குப் பதவுரை தருக. 2. இனிய சொல், ஒழுக்கம் உயர்வளிக்கும், பொறுமை க. லினும் பெரிது, ஆறுவது சினம், ஆசையை ஒழி-இக் கருத்துக்களுக்குரிய குறட்பாக்கள்ே எடுத்து எழுது.

2. விவேக சிந்தாமணி

கல்விச் சிறப்பு வெள்ளத்தால் போகாது; வெந்தணலில் வேகாது; கொள்ளத்தான் போகாது கொடுத்தாலும் குறையாது; கள்ளருக்கும் எட்டாது காவலுக்குள் அமையாது; உள்ளத்தே பொருளிருக்க ஒளிலுழைத் துழல்வானேன்? !

அன்புடன் இடுக ஒப்புடன் முகமலர்ந்தே உபசரித் துண்மை பேசி, உப்பிலா கூழிட் டாலு முண்பதே அமிர்தம் ஆகும்: