பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

1s) வருணிக்க இயலாதவை. ஆடவர் என்றும் மகளிர் என்றும் படுகிழவர் என்றும் பச்சிளம் பாலகர் என் ஆறும் பாராமல், கண்ணில் கண்ட உயிர்களையெல்லாம் வெட்டி வீழ்த்தி வேட்டையாடினர் வெள்ளே வெறி யர்களும் அவர்களோடு வந்த புல்லியர்களும். ஏகாதி பத்தியத்தின் சார்பில் நடத்திய முதற்படை. யெடுப் பின் கொடுமையின் எல்லேயைக் கண்டது இந்த இடம்தான். பிரிட்டிஷ் படையெடுப்பின் வன்மை யைக் கண்டு நடுங்கினர் பாளையக்காரர் அனேவரும். அதன் பயணுக அவர்தம் கப்பத்தொகை கர்னல் ஹீரான் காலடியில் குவிந்தது. அச்சமே கிறைக் திருந்த அங்கிலேயிலும் அங்கியப் படையெடுப்பை எதிர்க்க இரண்டு உள்ளங்கள் துள்ளின. ஒன்று பாஞ்சைத் தலைவனுகிய பொல்லாப் பாண்டியக் கட்ட பொம்முவின் உள்ளம். மற்றென்று, மறவர் குல திலகமாகிய பூலித் தேவரின் பேருள்ளம். பொல்லாப் பாண்டிய கட்ட பொம்முவுக்கு ஆசை இருந்தது போல் ஆற்றல் இல்லை. அதனுல் கர்னல் ஹரோனுக்குக் கப்பம் கட்டினர்; கருனேயின்றித் தமக்கு வேண்டியவர்களையே ஆள் பிணேயாகக் கொடுத்துத் தலே வணங்கிப் போனர். ஆனல், தெற்கட்டுஞ் செவ்வல் பாளையத் தலைவராகிய பூலித் தேவரோ, ஒரு ரூபாய் கூடக் கப்பம் தர முடியாது. உன்னுல் ஆனதைப்பார்!’ என்று சொல்லிக் கர் னல் ஹீரானே கிலே குலையச் செய்து, பல நாள் முற்றுகையிட்டும் ஒரு பயனும் காணுமல் ஏமாற்றம் உற்ற கசி போல் மதுரைக்கு ஏகச் செய்தார்.