24
டது. அது மட்டும் அன்று; கான் சாகிபை உயிரோடு பிடித்து இன்ன செய்ய வேண்டும் என்றும் கட்டளையிட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி, அது பற்றி லாரென்சுக்கு எழுதிய கடிதம் வருமாறு: ‘ஆர்க்காட்டு நவாபு கான் சாகிபை அரசியல் கைதியாக உயிருடன் வைத்திருக்க விரும்புவானானால், அது எவ்வளவு ஆபத்தானது என்பதை எண்ணி அஞ்சுகிறோம். ஆனால், கான் சாகிபைப் பார்த்தவுடன், அவனது பட்டாளமெல்லாம் பார்க்கும் வகையில், கண்ணுக்குத் தெரியும் முதல் மரத்தில் அவனைத் தூக்கிலிட்டுக் கொன்றால், அதுவே எங்களுக்குத் திருப்தி அளிக்கும்.’
இந்த உத்தரவோடு ஆரம்பமாகியது கான் சாகிபைத் தாக்கும் படலம். ஏறத்தாழ, ஓர் ஆண்டும் மூன்று மாதங்களும் அவனைப் பிடிக்க ஓயாது முயன்றது கும்பினி அரசாங்கம்; பெருத்த பட்டாளத்துடன், கான் சாகிபு கைப்பற்றியிருந்த மதுரை மாநகரைத் தாக்கியும், முற்றுகையிட்டும் அழிக்க முயன்றது. தாக்குதலின் கடுமை பயங்கரமாய் இருந்தது. எண்ணற்ற உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட போதிலும், பிரிட்டிஷ் படைகளால் கோட்டையை நெருங்கக் கூட முடியவில்லை. கான் சாகிபின் படைகளுக்குத் தலைமை தாங்கிய பிரெஞ்சுத் தளபதியாகிய மார்ச்சந் மிகுந்த திறமையோடு போராடினான். கான் சாகிபும், அவனுடைய வீரர்களும் உயிரைத் துச்சமாக மதித்து, உறுதி குலையாமல் சமர் புரிந்தனர். அதன் விளைவாகப் பெருத்த