பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

குயிலும்...சாரலும்

பாரதி எண்ணிக்கூடப்பாராத–புரட்சியின் உயர் நிலையாகிய–தன்மானக் கருத்துக்களைக் கொண்டபோதும் கூட அவர் ‘பாரதிதாசன்’ என்ற தம்பெயரை மாற்றிக்கொள்ளவில்லை.

பறையருக்கும் இங்குதியர் புலையருக்கும் விடுதலை

பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை

என்று உண்மையான விடுதலையைக் கனவு கண்டு பாடியவன் பாரதி.

ஏழையென்றும் அடிமை யென்றும்
     எவரும் இல்லை சாதியில் இழிவு
கொண்ட மனிதரென்ப

     திந்தியாவில் இல்லையே

என்று சமான வாழ்வைப் பாடியவன் பாரதி.

சுதந்திரம் வந்தால் அது எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையான உரிமை வாழ்வைக் கற்பனை செய்து கனவு கண்டவன் பாரதி.

அவனுடைய சுதந்திரப் பள்ளுப் பாட்டு, வெள்ளையனை விரட்டியடித்தபின் இருக்க வேண்டிய பாரதத்தின் உண்மையான படப்பிடிப்பு. பரங்கியரைத் துரத்தியபின் ஏற்றம் போட்டு விடக்கூடிய பார்ப்பனரை ஆதிக்கம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய விழிப்புணர்வை சுதந்திரப் பள்ளுப் பாடலில் காண்கிறோம்.

உண்மையான சுதந்திரம், விழிப்புச் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதை சுதந்திரப் பள்ளுப்பாட்டு உணர்த்துகின்றது.

வெள்ளைக்காரனிடமிருந்து விடுதலை பெறுவது மட்டும் சுதந்திரம் என்று பாரதி நினைக்கவில்லை. நம் நாட்டுக்குள்ளேயே நிலவி வருகின்ற நீண்டகால அடிமைப்பழக்க-