பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

17

இவர்கள் இருவரும் காதல் புரிந்து கொண்டிருந்த வேளையில் மாமன் மகன் மாடனும், நெட்டைக் குரங்கனும் அங்கு வந்து சேர, சேர இளவரசனுக்கும் அவர்களுக்கும் சண்டை மூண்டு ஒருவரை யொருவர் வெட்டிக் கொண்டு மூவரும் மடிந்து போனார்களாம். இந்தப் பிறப்பிலும், காதலுக்கு இடையூறாய் மாடனும், நெட்டைக் குரங்கனும் பிறந்து வந்து தொல்லை கொடுக்கிறார்களாம்.

முனிவர் கூறியதாக இந்தக் கதையைக் குயில் கூறியவுடன், பாவலர் அதைப் பற்றி யிழுத்து முத்தமிட குயில் அழகிய பெண்ணாக மாறிவிட்டதாம். அந்த அழகு மகளுடன் பாவலர் சித்தம் மயங்கியிருந்த போது கனவு கலைந்து விட்டதாம்.

கனவில் தோன்றிய இந்தக் கற்பனையில் வேதாந்தக் கருத்துத் தொக்கியிருக்கிறது. அதைக் கண்டு கொள்வது கற்றோர் திறன் என்று முடிக்கிறார் பாரதியார்.

வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க

யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?

இது பாரதியார் குயில் பாட்டைப் படிப்பவர்களுக்கு இடும் வேலை.

எந்தக் கதைக்கும் வேதாந்தக் கருத்துக் கூறுவது நம்மவர்களின் இயல்பு. அதுபோல் தன் கதைக்கும் கருத்துத் தேடியுரைக்குமாறு பாரதியார் வாசகர்களை வேண்டுகிறார்.

குயில் சீவான்மா என்றும், பாவலர் பரமான்மா என்றும், சீவான்மா பரமான்வாவோடு ஐக்கியப்படுவது முக்தி என்றும் முக்தியே பிறப்பின் இலட்சியம் என்றும் கூறுவது வேதாந்தம்.

பொதுவாக சீவான்மா பரமான்மாவை நாடுவது தான் இயற்கை. சில நேரங்களில் பரமான்மா வலித்து ஆட்-