பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

குயிலும்...சாரலும்

கொள்ளச் சீவான்மாவைத் தேடிவருவது சிறப்பு. பாவலர் குயிலைத் தேடிச் செல்வது பரமான்மாவின் ஆட்கொள்ளும் அருள் குணத்தைக் காட்டுகிறது. சீவான்மா பரமான்மாவிடம் ஐக்கியமாவதற்குத் தடையாயிருப்பது அதனிடம் உள்ள விலங்குணர்வும், அலைபாயும் மனவியல்பும் ஆகும். விலங்குணர்வுக்கு மாடும், அலைபாயும் மன இயல்புக்குக் குரங்கும் எடுத்துக் காட்டுகள். இவற்றைக் கொன்றபின், விட்டு விலகிய பின், சீவான்மா பரமான்மாவை அடைவது எளிதில் கை கூடுகிறது. இப்படித்தான் பாரதியாரின் குயில் பாட்டுக்கு வேதாந்தப் பொருள் உரைக்க முடியும்.

பாரதியார், புராணப் போக்குள்ள ஒரு கதையைக் கற்பனை செய்து அதில் வேதாந்தப் பொருள் இருக்கிறதென்ற குறிப்போடு கதையை முடிந்துவிட்டார். இப்படி அவருக்கொரு கற்பனை தோன்றக் காரணமாய் இருந்தது. அவர் பிறந்து வளர்ந்த சூழ்நிலை யென்றுதான் சொல்ல வேண்டும். இலக்கியம் என்பவற்றில் பெரும்பாலானவை புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் இருப்பதால், அவற்றையே படித்தும் கேட்டும் பழக்கப்பட்ட பாரதியார் அதுபோன்ற ஒரு கதையைத் தாமும் படைக்க முற்பட்டது வியப்பன்று.

இனி பாரதிதாசனின் படைப்பான சஞ்சீவி பர்வதத்தின் சாரல் கதையைப் பார்ப்போம்.

சாரல் கதையமைப்பு.

சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே முன் ஏற்பாட்டின்படி வஞ்சியும் குப்பனும் சந்திக்கிறார்கள்.

முன்னொரு நாள் குப்பன் இரண்டு மூலிகைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தான். ஒன்றைத் தின்றால் உலக மக்கள் பேசுவது காதில் கேட்கும்; மற்றொன்றைத் தின்றால்,