பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

குயிலும்...சாரலும்

ஒரு சீர் விளச்சீரில் அல்லது காய்ச் சீரில் முடிந்தால் தொடர்ந்து வரும் சீர் நேரசையில் தொடங்க வேண்டும்.

இரண்டு அடிகள் ஒரே எதுகை யுடையனவாய் இருக்க வேண்டும். மூன்றாவது சீரில் மோனை அமைந்திருக்க வேண்டும்.

சொல்லுங் கருத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

இரண்டு தடவை படித்தால் மனப்பாடம் ஆகிவிட வேண்டும். அவ்வளவு எளிமையாக அமைந்திருக்க வேண்டும் வெண்பா.

இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளோடு பாடுவது கடினம் என்று இலக்கணப் புலவர்கள் கருதுவார்கள்.

இலக்கணம் வேண்டாத புதுக் கவிதைக்காரர்களும், இந்தக் கட்டுப்பாடெல்லாம் தேவையில்லை. வடிவமைப்பு இல்லாமலே பாடல் படைக்கிறோம் என்று தமிழில் குப்பை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பயிற்சி பெற்ற ஒரு பெண். வண்ண நூல்களை எடுத்துக் கண்ணிக் கணக்கு வைத்துப் பின்னிக் கொண்டு வந்தால் அழகிய கைப்பை உருவாகிறது. அவளே பின்னுவது வீண் முயற்சி, பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது கால விரயம் என்று சொல்லி கண்டில் உள்ள நூலைப் பிரித்து, தரையின் மீது கைக்கு வந்தபடி மேலே மேலே கோணலும் மாணலுமாய்ப் போட்டுக் கொண்டு வந்தால், எதற்கும் பயன்படாத குப்பையாகி எடுத்தெறியத் தக்கதாய் இருக்குமே தவிர. போற்றி வைத்துக் கொள்வதாய் இராது. அதுபோலவே, புதுக் கவிதைகளும் குப்பையாய் அப்புறப்படுத்தத் தக்கனவே தவிர, இலக்கியப் பேழையில் இடம் பெறா.

பாரதியும் பாரதிதாசனும் கைவந்த கலைஞர்களாய் விளங்குகிறார்கள். யாப்பு அவர்களுடைய கைக்கருவியாய்,