பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காதல்


காதல் காதல் காதல்
காதல் போயிற் காதல் போயிற்

சாதல் சாதல் சாதல்

இப்படித் தொடங்கும் பத்துப் பாட்டுகளைக் குயில் குக்குக்கூ வென்ற இன்னிசைத் தீம்பாட்டாய்ப் பாடுகிறது. இன்னமுதைக் காற்றினிடை எங்கும் கலந்ததுபோல், மின்னல் சுவைதான் மெலிதாய், மிகவினிதாய் வந்து பரவுதல் போல், வானத்து மோகினியாள் இந்தக் குயில் உருவம் எய்தித் தன் ஏற்றம் விளக்குதல்போல் இந்த இன்னிசைத் தீம்பாடல் இருப்பதாகப் பாரதியார் மயக்கந் தரும் மொழியில் எடுத்துரைக்கின்றார்.

குயில் தன் காதலை எடுத்துரைக்கும் பாங்கு மிக அழகாய் அமைந்துள்ளது. மானுடர் பாட்டில் மனத்தைப் பறிகொடுத்துப் பாவலரின் காதலை வேண்டிக் கரைவதாய்க் குயில் கூறுகிறது.

குயில் பாடிய காதல்பாட்டு பாவலரின் உள்ளமாம் வீணைதனில் உள்ள வீடத்தனையும் விள்ள ஒலிப்பதால் வேறோர் ஒலியில்லை என்று, மனம் அந்தப் பாட்டிலேயே மயங்கிக் கிடப்பதைக் கூறுகிறார். குயிலின் உருவம் தன்