பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

குயிலும்...சாரலும்

மன்மதனார் விந்தையால்

புத்திமனம் சித்தம் புலனொன்றறியாமல் வித்தைசெயும் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையெனக்


காலிரண்டும் கொண்டு கடுகவுநான் சோலையிலே நீலிதனைக் காணவந்தேன்.........

என்று தன்னை மறந்து கால் இழுந்துக் கொண்டு போகும் விந்தையைக் கூறுகிறார்.

குரங்கு குயிலின் பாட்டில் மயங்கிக் காதலுற்றுச் செய்யும் சேட்டைகளைக் கவிஞர் அப்படியே குரங்குப் பாணியிலேயே வருணிக்கிறார்.

வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறி கொண்டாங்ஙனே
தாவிக் குதிப்பதுவும் தாளங்கள் போடுவதும்
ஆவி யுருகுதடி ஆஹாஹா என்பதுவும்
கண்ணைச் சிமிட்டுவதும் காலாலும் கையாலும்
மண்ணைப் பிறாண்டி வாரி யிறைப்பதுவும்

என்று அந்தக் குரங்கு காதல் வெறி கொண்டு பேசுவதைப் பாவலர் பாரதியார் கூறும்போது, கண்ணின் முன்னே அந்தக் குரங்கு ஆட்டம் போடும் காட்சி தோன்றுகிறது.

சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே குப்பன் வந்து காத்திருக்கின்றான். சொன்னபடி இளவஞ்சி வருவதை எதிர்நோக்கி தென்திசையைப் பார்த்தபடி இருக்கின்றான். அச்சடித்த செப்புச் சிலைபோலே அவன் அவளுக்காக-அவள் வரும் திசையையன்றி வேறு நோக்கின்றிக் காத்திருக்கின்றான். ஆடாமல் அசையாமல் வாட்டத்தோடு காத்திருக்கின்றான். அவள் அவனை நெடுநேரம் கூடக் காக்க வைக்கவில்லை. அவன் வந்து சிறிது நேரத்தில் அவள் வந்து விடுகின்றாள்