பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

31

காதலின் வேகத்தைக் குப்பனின் செயலிலே காட்டும் இந்த வரிகள், படிக்கும்போதே வேகத்தை உணர்த்தி நிற்கின்றன.

ஓர் இளைஞனுக்கு ஒரு மங்கையிடம் ஏற்பட்ட மாசு மருவற்ற காதலை-அவளுக்காகத் தான் எதுவும் செய்யச் சித்தமாயிருக்கும்-ஈடுபாட்டை அருமையாக விளக்குகின்றன இந்தக் கவிதை வரிகள்.

இலக்கியங்களிலும் சரி, நடைமுறை வாழ்க்கையிலும் சரி காதல் ஏற்பட்டபின் அந்தக் காதலுக்காக எதையும் செய்யத், துடிக்கும் துடிப்பு ஆண் பெண் இருபாலாரிடையேயும் காணப்படுகிறது. ஆனால் காதலுக்கு அடிமைப்படும் போக்கு ஆண்களிடம் மட்டுமே காணப்படுகிறது. தம்மேல் இச்சை கொண்ட ஆடவரைத் தம் கருத்துப்படி நடத்துகின்ற வல்லமையைப் பெண்கள் எப்படியோ பெற்று விடுகிறார்கள்.

தன்மேல் அன்பு வைத்த ஆணிடம் தனக்கு வேண்டியதை எல்லாம் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் ஆற்றல் அல்லது திறமை பெண்களிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. ஆண்களோ, காதல் வயப்பட்டபின், அவளுக்கு மனநிறைவு தர எதையும் செய்யச் சித்தமாய் இருக்கும் அடிமைகளாய் மாறி விடுவார்களே தவிர, அவனிடமிருந்து எதையும் கேட்டுப் பெறும் மனப்பான்மை பெறுவதே இல்லை.

பொருளாசை யில்லாத பெண்கள், தம்மேற் காதல் கொண்டவர்களைத் தம் கருத்துப்படி யாட்டிப் படைப்பார்கள். தாம் சொன்ன செயல்களைச் செய்து முடிக்கும்படி கட்டளையிடுவார்கள். அன்புக் கட்டளை யென்று அதை நிறைவேற்ற ஆண்கள் பறந்து கொண்டிருப்பார்கள். பொதுவாக, காதல் என்று ஒன்று ஏற்பட்டுவிட்டால் அங்கே பெண்-