பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

குயிலும்...சாரலும்

கள் ஆட்சி செலுத்துவதும். ஆண்கள் ஆட்பட்டு நிற்பதுமே பெரும்பாலும் தொன்றுதொட்டு நிகழும் கூற்றாய் இருக்கிறது.

குயில் தன்னைக் காதலிக்கும் பாவலனைத் தன்னையே நினைந்துருகும் வண்ணம் செய்து விடுகிறது. அதுபோலவே தன்னைக் காதலிக்கும் நெட்டைக் குரங்களையும், மாடனையும் வயப்படுத்தி விடுகிறது.

காதலிக்கும் பாவலனை நான்காம் நாள் வருமாறு கூறுகிறது குயில், நான்காம் நாள் என்ன நாளையே வருகிறேன் என்று சொல்லத் தோன்றவில்லை பாவலனுக்கு. அது சொன்னதைக் கேட்டுக் கொண்டு திரும்புகிறான். ஆனால், நான்கு நாள் பொறுத்திருக்க முடியாமல் மறுநாளே காணப் புறப்பட்டு விடுகின்றான்.

குயில் தன் இசையால் மட்டுமன்றித் தன் திறமையான பேச்சாலும் பாவலனை அடிமைப் படுத்திவைக்கிறது.

அது காளை மாட்டையும் குரங்கையும் கண்டு காதல் மொழி பேசுவதைக் கேட்டு ஆத்திரமடைந்து வாளால் கொல்லக் கருதி வீசமுற்பட்ட போதும்கூட, பாவலன் அதன் காதலுக்கு மீறி நடக்க முடியவில்லை.

தனக்குப் போட்டியாய் வந்த இருவர் மீது காதல் செலுத்தும் குயிலைக் கண்டதுண்டமாய் வெட்டிப்போட நினைத்தாலும், மீண்டும் மீண்டும் அதன் மேல் பித்தாகி அதைத் தேடிச் செல்லும் பாவலனை நோக்கும்போது, அவன் கொண்ட காதல், அவனை மீளா அடிமையாக்கி விட்டதை யுணர முடிகிறது. நான்காம் நாளும் குயில் தன்முற்பிறப்புக் கதையைக் கூறி அவனை மேலும் தன்வயப்படுத்துகிறது.