பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு 35

  • மூலிகைக்குப் பக்கத்தில், உமைத்தழுவி நோகாமல் நூறு முத்தங்கள் தருவேன்’ என்று சாரலிலே வாக்களித்தவள், இப்போது என்ன சொல்கிறாள். 'சாரல்தான் காதலுக்குத் தக்க இடம்; அங்கே போவோம்’ என்கிறாள்.

பாவம் குப்பன்!

இவ்வளவு பொறுத்தோம்; இன்னும் சற்றுப் பொறுப் போம் என்று அடங்கிப் போகிறான்.

சாரலுக்கு மீண்டும் இறங்கி வந்தவுடன் வஞ்சி மேலும் அவன் பொறுமையைச் சோதிக்கவில்லை.

“அன்பு மிகுந்தே அழகிருக்கும் நாயகரே! இன்பமும் நாமும் இனி” என்று குப்பன் மனங்களிக்கக் கூடுகிறாள். நெஞ்சு முழுமையாக நிறைவெய்துகிறது.

கதை முடியும் போது சுவைஞர்களுக்குப் பலவிதமான நிறைவுகள் ஏற்படுகின்றன.

ஒரு நல்ல காதல் கதையைப் படித்தோம் என்ற மன நிறைவு.

அறிவுத் தெளிவு ஏற்படுத்தும் ஒரு புதுநெறிபரப்பும் இலக்கியத்தைப் பெற்றோம் என்ற மனநிறைவு.

துய காதல் உணர்வுகளை அழகிய கவிதைக் கண்ணிகளிலே வடித்துக் கொடுக்கும் ஒர் இலக்கியப் படைப் பாளியைத் தமிழகம் பெற்றதே என்ற மனநிறைவு.

துன்பியலாக இல்லாமல் கதை இன்பியலாக முடிந்த தனால், இயல்பாக ஏற்படும் மனநிறைவு.

புதிய பல உவமைகளை-இனிய சொல்லாட்சிகளை-நெஞ்சில் நிலைத்து நிற்கும் நாடகக் காட்சிகளை படிக்கும் போதே மனக்கண்முன் நிறுத்தும் நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து மனநிறைவு கொள்ளுகின்றோம். -