பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.கிண்டற்சுவை


குயில் பாட்டிலே பாரதியார் மனிதர்களை அழகாகக் கிண்டல் செய்கிறார். குயில் நெட்டைக் குரங்கனாகிய வானரத்தைப் புகழும்போது, மனிதர்களை ஏளனமாகப்பேசி வானரத்தை யுயர்த்திப் பேசும் பகுதிகள் மிகச் சுவையாக அமைந்துள்ளன.

மாயக்குயிலின் கிண்டல் மொழிகள் அதன்மீது சினம் ஏற்படுத்துவதற்குப் பதிலாக அதன் திறனை வியந்து போற்றவே செய்கின்றன.

மண்ணில் உயிர்க்கெல்லாம் தலைவரென மானிடரே
எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்
கோயில் அரசு குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே அந்த மனிதர் உயர்வெனலாம்.

நாகரிகத்தில் மனிதர் உயர்ந்தவர்தாம் என்று உண்மையை ஒப்புக்கொண்ட குயில் இனிமேல்தான் தன் கிண்டலைத் தொடங்குகிறது.

மேனி யழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே
வானரர்தம் சாதிக்கு மாந்தர்நிகராவாரோ!

கேட்டுக் கொண்டிருக்கும் குரங்குக்கு இன்பபோதை தலைக்கேறுகிறது. குயில் தொடருகிறது;