பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு 37

ஆனவரையும் அவர்முயன்று பார்த்தாலும்
பட்டு மயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் ஆசை முகத்தினைப் போல் ஆக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகில் உமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே வானரர்போல் ஆவாரோ? வாலுக்குப் போவதெங்கே ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு, கந்தைபோல் வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?

என்று அந்த மாயக் குயில் மானிடரைக் கிண்டல் செய்து குரங்கைப் புகழ்ந்து அதன் காதலுக்கு ஏங்கித் தவிப்பதாகப் பாடுகிறது உண்மையில் இது குரங்கையே கிண்டல் செய்வது போல் இல்லையா? மதியில்லாத குரங்கு, தன்னைப் பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறது.

மானிடரைவிடத் தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் வந்ததும் அது குடிகாரன் போல் ஆடத் தொடங்கிவிடுகிறது. அவ்வளவு புகழ்ப்போதை!

இந்தக் குயில் காளை மாட்டைப் பார்த்துக் காதல் மொழி பேசும் போது உண்மையிலேயே மாட்டை யுயர்த்திப் புகழ்கிறது. மாட்டைப் புகழும்போது மானிடரை இகழ்கின்றது. அந்தச் சொற்கள் உண்மையிலேயே மானிடரைப் பழிப்பதாய் உள்ளது. அங்கே கிண்டல் எதுவும் காணப்பட-