பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.மெய்யுணர்தல்


நான்காம் நாள் பாவலர் குயிலைச் சந்திக்கிறார். பொய்மாயக் குயில் காதல் பாட்டுப் பாடுகிறது. 'ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும் எண்ணி நீ பாடும் இழிந்த புலைப்பாட்டை நீசக்குயிலே, நான் கேட்கவா வந்தேன்?’ என்று கேட்கிறார்.

குயில் பாவலரிடம் மட்டுமல்லாமல் குரங்கிடமும் மாட்டிடமும் காதல் உரையாடியதை மறுக்கவில்லை. ஆனால், அது விதியின் பயன் என்று கூறுகிறது. அதை மெய்ப்பிக்க அது தன் முன்பிறப்புக் கதையைக் கூறுகிறது.

குயில் ஒரு மாஞ்சோலையில் ஏதோ தனியாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் முக்காலமும் உணர்ந்த முனிவர் ஒருவர் அச்சோலைக்கு வருகை புரிகிறார்.

அவர் காலில் விழுந்து வணங்கி தன் நிலைமைக்கு விளக்கம் கேட்கிறது. அற்பமான பறவைச் சாதியில் பிறந்த எனக்கு எல்லா மொழியும் புரிவது ஏன்? மானிடர்போல் நான் சிந்தனை பெற்றது எப்படி? என்று முனிவரைக் குயில் கேட்டது.

முனிவர் அதன் முன் பிறப்பு பற்றி எடுத்துரைக்கிறார்.

குயிலே, முன்பிறப்பில் வீரமுருகன் என்ற வேடர் தலைவன் மகளாகப் பிறந்தாய். அப்போது உன் பெயர்