பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

குயிலும்...சாரலும்

ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவியங்கு மூடி இருந்த விழிநான்கு
ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியில் தீப்பற்றி
ஒங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு

மாடனும் குரங்கனும் ஆத்திரத்தோடு ஓடிவந்து இவவரசனை வாளால் வெட்டினார்கள். முதுகில் வாள் பாய்ந்ததும் துள்ளி எழுந்த மன்னர் மகன் இரண்டு வீச்சில் அவர்கள் இருவரையும் வெட்டி வீழ்த்தினான். ஆக மூவரும் அக்கணமே பிணமாய் விழுந்தார்கள்.

நீ மன்னர் மகனை வாரியெடுத்து மடியில் வைத்துக் கொண்டு புலம்பினாய், மறுபிறவியில் உன்னுடன் கலந்து வாழ்வதாக உறுதி கூறி உயிர் விட்டான் சேர இளவரசன். அவன் இப்போது ஓர் மானிடனாய்த் தோன்றியுள்ளான். உன்னை அடைவான் என்றார் முனிவர்.

இவ்வாறு முனிவர் கூறியதைக் கேட்டுக் குயில் கேட்கிறது! சாமீ, குயிலாக இருக்கும் நானும், மானிடராக இருக்கும் அவரும் எப்படி வாழ்க்கை நடத்துவது? அதற்கு முனிவர் சொல்வார்:

இந்தப் பிறவியிலும் நீ ஓர் வேடர் மகளாகத்தான் பிறந்தாய். ஆனால் பேயாய் அலைகின்ற மாடனும் குரங்கனும் உன்னைக் கண்டு கொண்டார்கள். அதனால் மாயம் செய்து உன்னைக் குயிலாக்கி, பின்தொடர்ந்து திரிகின்றார்கள். அவர்கள், செய்யும் மாயத்தால், உன் காதலர் உன்மேல் ஐயுறுவார். ஆனால் பின்னால் நடப்பதெலாம் நீ பிறகு தெரிந்து கொள்வாய். எனக்கு ஜபம் செய்யும் நேரமாகி விட்டது என்று கூறி அவசரமாக முனிவர் போய்விட்டார்.

இதுதான் உண்மை. என்னை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம் என்று கூறிப் பாவலரின் கையில் வந்து விழுகிறது குயில்,