பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

செந்தமிழ் நாடெனும்
   போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது
   காதினிலே!

சின்னஞ்சிறு வயதிலே செவியில் பட்ட இந்தப்பாட்டு இன்றைக்குப் படித்தாலும் இன்பக் கிளர்ச்சி யூட்டுவதாக இருக்கிறது; வீர உணர்வும்; நாட்டுப் பற்றும் ஊட்டுவதாக இருக்கிறது. இப்படிப்பட்ட தேனான பாக்கள் பலவற்றைப் பாடிய பாரதியாரை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் ஒர் உரிமையுணர்வு நெஞ்சுக்குள்ளே பூத்துக் குலுங்குகிறது.

விட்டு விடுதலை
   யாகிநிற்பாய்-ஒரு
சிட்டுக் குருவியைப்
   போலே!

பாரதியாரின் தேசியப் பாடல்கள் இளம் நெஞ்சங்களிலெல்லாம் விடுதலை யுணர்ச்சியை ஊட்டிக் கொண்டிருந்த காலம்.

வந்தே மாதரம்' எனற முழக்கம் இளைஞர்களின் எழுச்சி முழக்கமாக விளங்கிய அந்த நாட்களிலே, காந்தியடிகளைப் போலே, நேதாஜியைப் போலே, நேருவைப் போலே, பாரதியாரும் தமிழ்நாட்டு இளைஞர்களின் நெஞ்சில் நிலைத்த குடி கொண்ட சான்றோராக விளங்கினார்.