பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

51

இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லுவதை விட்டு, எப்படியும் வாழலாம் என்று எடுத்துக் காட்டுவதாகவே குயிலின் காதல் அமைகிறது. அழகான வருணனைகள், கடவுள் படைப்பு விளக்கம், காதல் பற்றிய கருத்தோவியங்கள், இசையின் உயர்வு, ஒட்டமான கவிதை இத்தனையும் சேர்த்து ஒரு மாயக் குயிலைப் படைத்துள்ளார் பாரதியார். இந்த மாயக் குயிலின் கதைக்கு, வேதாந்தப் பொருள்தான் கூற வேண்டியிருக்கிறதே தவிர, சித்தாந்தப் பொருள் கூற முடியவில்லை.

மாயக் கதையின் பொருளறிய மீண்டும் ஒரு மாயா லோகத்திற்குச் செல்ல வேண்டிய நிலையில் கதை முடிவு அமைந்துள்ளது.

குயிலின் மெய்யுணர்தல் முன்பிறப்பு வரலாறு அறிதல் என்ற நிலையில் அமைந்துள்ளது. சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் மெய்யுணர்தல் நாட்டு நிலையுணர்தல் என்ற நிலையில் அமைந்துள்ளது. இங்கே ஓர் அற்புதமான காட்சியைப் படைக்கிறார் பாரதிதாசன்.

இங்கிலாந்து தேசத்தான் பேசி முடிந்தவுடன், இடையில் காதல் உணர்வு தோன்றுகிறது. குப்பன் வேண்டுகோளுக் கிணங்கி வஞ்சி முத்தமிட நெருங்குகிறாள். முத்தமிடப் போகையிலே ஐயையோ! ஐயையோ! என்ற அவலமொழி காதில் விழுந்தது! முத்தம் கலைந்தது. ஐயையோவைக் தொடர்ந்து கவனிக்கிறார்கள்!

“இதோ ஒரு நொடியில் சஞ்சீவி மலையை வேரோடு பெயர்த்து எடுத்து வருகிறேன்”

இந்தச் சொற்கள் அவர்கள் காதில் விழுகிறது. தாங்கள் இருக்கும் சஞ்சீவி மலையை யாரோ பெயர்த்தெடுக்கப்