பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

குயிலும்.சாரலும்

“எனக்குப்பயம்தான். இருந்தாலும் ஒரு நம்பிக்கை -ஒர் ஆபத்தும் இராதென்று நினைத்தேன்-நல்லவேளை என் நம்பிக்கை பலித்தது-தப்பித்தோம்” என்று மூச்சு விடுகிறான் குப்பன்.

வஞ்சி கேட்கிறாள்: “அன்பரே, நாம் இந்த மலைக்கு வந்தது முதல் இந்த நேரம் வரை நடந்த ஆச்சரியமான நிகழ்ச்சி என்ன?”

“என்னடி, இது தெரியவில்லையா? இந்த மலையில் நாம் இருக்கும்போதே அந்த அனுமார் வந்ததும், மலையைப் பெயர்த்து இலங்கையில வைத்ததும், திரும்ப எடுத்துவந்து பழைய இடத்தில் வைத்ததும் நினைத்துப் பார்த்தால், ஆடாமல் அசையாமல் மலையைப் பெயர்த்து சற்றுக் கூடக் குலுங்காமல் கண்ணாடிப் பாத்திரத்தைக் கல் தரையில் வைத்ததுபோல் அவ்வளவு மெதுவாக வைத்தாரே அந்த இடம்தான் ஆச்சரியம்! தலைமாட்டிக்கொள்ளாமல் கெட்டிக்காரத் தனமாகக் குனிந்து வைத்தாரே அது பேராச்சசியம்!

குப்பனுக்கு வஞ்சி பதில் சொல்லத் தொடங்குமுன் மீண்டும் குரல் ஒலிக்கிறது.

இதுவரை இந்தக் கதையை நிறுத்துகின்றேன். நாளை மீண்டும் தொடர்ந்து சொல்லுகின்றேன். இந்தச் சத்திய ராமாயணக் கதையைக் கேட்டவர்கள் சொன்னவர்கள் எல்லாரும் இந்த உலகத்தில் உள்ள செல்வ போகம் அனைத்தும் அனுபவித்து, வைகுண்டம் போய் அங்குள்ள தேவலோக இன்பங்களையும் குறையாது அனுபவிப்பார்கள்! ஜானகி காந்தஸ்மரனே! ஜயஜயராம்!

மானோ தென்ன என்றான் வையம் அறியாக் குப்பன்
முன்புதான் உங்களுக்கு முத்தம் கொடுக்கையிலே
சொன்ன ஐயையோ தொடங்கி இதுவரைக்கும்

ராமாயணம் சொல்லி நாளைக் கழிக்கின்ற