பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

55

ஏமாந்தார் காசுக் கெசமானன் என்றுரைக்கும்
பாகவதன் சொன்னான் பலபேரைக் கூட்டியே,
ஆகியதும் இத்த அரிய உழைப்புக்குப்
பத்தோ பதினைந்தோ பாகவதன் பெற்றிடுவான்.

இதில் வியப்பதற் கொன்றும் இல்லை. இதோ இந்தக் காட்சி தரும் மூலிகையை விழுங்கிப் பருங்கள் என்கிறாள். ஒரு மாளிகையில் பாகவதர் ஒருவர் இராமாயணம் படிப்பதும், மக்கள் இராமாயணம் கேட்டுவிட்டுத் திரும்புவதும், பாகவதர் தமக்குக் கிடைத்த பணத்தைத் தட்டிப் பார்ப்பதும் மகிழ்ச்சி கொள்வதும் ஆகிய காட்சிகள் தெரிகின்றன.

வஞ்சி ஒரு பெரிய சொற்பொழிவு நடத்துகிறாள். மூடத் தனங்களை வளர்க்கும் இராமாயணம் போன்ற கதைகளைப் பற்றியும் பகுத்தறிவு கொள்ள வேண்டியதைப் பற்றியும் பேசுகின்றாள்.

ராமாயணம் என்ற நலிவு தருங்கதை
பூமியில் இருப்பதை இப்போதே அறிகின்றேன்

என்று கூறிக் குப்பன் திருந்துகின்றான். மூடப்பழக்கத்தை ஒடச் செய்ய உறுதி யெடுக்கின்றான். பிறகு இருவரும் சாரலுக்கு இறங்கிவந்து இன்பமாகக் கூடுகிறார்கள்.

சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் மெய்யுணர்தல் பகுதி இவ்வாறு குப்பன் பகுத்தறிவு பெறும் காட்சியாக அமைகிறது.

ஆய்வுரை குயில்-சஞ்சீவி பர்வதத்தின் சாரல் இரண்டுமே ஒரே யாப்பில்-கலிவெண்பாவில் இயன்றுள்ளன. சொல்லாட்சிகள்-ஏறக்குறைய ஒரே மாதிரியாக-புதுமையாக அமைந்துள்ளன. மிக எளிய நடையில் இயன்றுள்ளன. நல்ல கற்பனைக்கு எடுத்துக் காட்டாக இரண்டுமே அமைந்துள்ளன. படிக்கத் தொடங்கினால் ஒரே மூச்சில் முடிவு