பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

குயிலும்...சாரலும்

வரை படித்துப் பார்த்துவிடும்படியான விரைவு நடையைப் பெற்றுள்ளன. ஒன்று கனவில் தோன்றிய கற்பனையாகவும்: மற்றொன்று மூலிகையில் பிறந்த காட்சியாகவும் அமைந்துள்ளன. எனினும் கதையமைப்பு ஒன்றுக்கொன்று முரண் பட்டதாக-நேர்மாறானதாக அமைந்துள்ளன. குயில்பாட்டு-புராணக்கதை போல் அமைந்துள்ளது.

தேசியக் கவியாகவும் புதுமைக் கவியாகவும், புரட்சிக்காரராகவும் மக்களுக்கு அறிமுகமாகியுள்ள பாரதியார் இது போன்ற ஒரு கதையைப் படைத்ததே-நம் எதிர்பார்ப்புக்கு மாறுபட்டதாக உள்ளது.

காதல் காதல் காதல்
காதல் போயிற் காதல் போயிற்

சாதல் சாதல் சாதல்

என்ற வரிகளைப் படிக்கும்போது, காதலுக்கு ஒரு இலட்சியப் பொருளை நாம் ஏற்றிப் பார்க்கிறோம். ஆனால் குயிலின் காதலிலே அந்த இலட்சியக் காதலைப் பார்க்கமுடிவதில்லை. மனிதனையும் மாட்டையும் குரங்கையும் அது வேற்றுமை யில்லாமல் காதலிக்கிறது. இதற்கு வித்தான காரணம் என்று சொல்லி ஒரு முற்பிறப்புக் கதையை உண்டாக்குகிறார் பாவலர். அந்த முற்பிறப்புக் கதையில் பழம் புராணக் கூறே மேலோங்கியிருக்கிறது. குரங்கனோடு வாழ்க்கை நடத்தி விட்டு மாடனிடம் வந்துவிடுவதாக ஆறுதல் கூறும் குயிலி: சேரமான் மகனிடம் ஆறாக் காதல் கொண்டு விடுகிறாள். கொலையுண்டு இறந்த மாடனும் குரங்கனும் பேயாகிக் குயிலியை ஒரு குயிலாக மாற்றி, அதைச் சுற்றிக் கொண்டு திரிவதாக முற்பிறப்புக் கதை கூறும் முனிவர் கூறுகிறார், ஆனால், நடப்பு நிகழ்ச்சியை நோக்கும்போது, குயில்தான் அவர்களை மயக்கிக் காதல் போதையேறச் செய்கிறது . மாடும் குரங்கும் குயிலை ஆட்டிப்படைக்கும் நிகழ்ச்சி ஒன்று