பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

57

கூடக் காணப்படவில்லை, குயில் தான் அவற்றை ஆட்டிப் படைக்கிறது. குயிலுக்கு காதல் ஒரு வேடிக்கை விளையாட்டாக இருக்கிறது. மன உணர்வுகளைத் தூண்டி விட்டு, ஒவ்வொருவரும் தன் மீது மோக மயக்கம் அடைவதை அது வேடிக்கை பார்க்கிறது. இப்படிப்பட்ட குயிலைத் தான் நாம் பார்க்கிறோம்.

எதிரில் இருப்பவரை உயர்த்திப் பேசுவதும்- இல்லாதவரைத் தாழ்த்திப் பேசுவதும்-ஏற்கெனவே இப்படிப் பேசினோமே என்பதைப் பற்றிக் கவலைப் படாமல், அந்தந்த நேரத்திற்கு யார் எதிரில் நிற்கிறார்களோ அவர்களையே உயர்த்துவதும் காதலிப்பதும் குயிலின் இயல்பாக இருப்பதைப் பார்க்கிறோம். கடைசிவரை அது மாயக் குயிலாகவே இருக்கிறதே தவிர, யாராவது ஒருவருக்கு நேயக் குயிலாக இல்லை.

பாரதியார், தம் ஆற்றல் அறிவு திறன் அத்தனையும் கொண்டு சித்திரித்த இத்தக் குயில் இலட்சியக் குயிலாகக் காணப்படவில்லை.

குயில் பாட்டிலே பாரதியாரின் கவியாற்றல் முழுவதும் அழகாக வெளிப்படுகிறது. நுட்பமான நோக்கறிவு சிறப்பாக வெளிப்படுகிறது. இயற்கை வருணனை, தத்துவபோதனை போன்ற கூறுகளெல்லாம் சிறப்பாக அமைந்துள்ளன. ஆனால் இத்தனை சிறப்புக்களும் கூடி மற்றொரு புராணக் கதையையே படைத்து விட்டமைதான் பெருங்குறையாக உள்ளது.

இந்தக் குறையைத் தீர்த்து வைக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே, பாவேந்தரின் படைப்பு-பகுத்தறிவைப் பரப்பும் ஒரு குறிக்கோளோடு ஆக்கப் பெற்றிருக்கிறது. இராமாயணம் போன்ற பகுத்தறிவுக் கொவ்வாத கதைகளால் நாட்டில் மூடத்தனம் வளர

கு-4