பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யவர் போதலேர். நிறைய எழுதுவதை அவர் விரும்ப வில்லை. ஒன்று செய்தாலும், ஒப்பற்றதாக இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். நச்சுப்பூக்களை 1850-இல் தொடங்கினார். அதன் கு ைற க ைள க் களைந்து, பத்தாண்டுகள் தி ரு த் தம் செய்து, மேன் மேலும் அழகுபடுத்தினார். 1861-இல் அதன் இறுதி வடிவம் உருப்பெற்றது.

போதலேரின் படைப்புக்கள் பற்றி ஆர்தர் சைமன்ஸ் என்ற திறனாய்வாளர், தாம் எழுதியுள்ள இலக்கியத்தில் @sou?LG, guðiðub ' (The Symbolist Movement in Literature ) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

ஒரே ஒரு கவிதை நூலை எழுதுவதில் போதலேர் தமது வாழ்க்கை முழுவதை யும் செலவிட்டார்; அதன் பிறகுதான் பிரெஞ்சு மொழியில் உயர்ந்த கவிதை கள் எல்லாம் தோற்றம் எடுத்தன.

ஒர் உரைநடை நூல் எழுதினார்; அந்த உரைநடை அழகுக் கலையாக (Fine Art) மதிக்கப்படுகிறது.

ஒரு திறனாய்வு நூல் எழுதினார். அவர் வாழ்ந்த காலத்தில் .ே தா ன் றி ய திறனாய்வு நூல்களில் இதுவே உயர்ந்த தும் உண்மையானதும், நுட்பமானதும் ஆகும்.

ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார்; அது மூலத்தை விடச் சிறப்பானது ,

போதலேர் எழுதியுள்ள உரைப்பாக்கள் (Spleen de Paris) ஐம்பது இருக்கும். அவை எதுகையோ, இசையொழுங்கோ

9 8