பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பது நாட்கள் தொடர்ந்து பனிமழை பெய்ததால், கடுங்குளிரில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். கொடிய பஞ்சம் ஏற்பட்டுப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினிக்கு இரையானார்கள். கடும்புயல் வீசி ஊர்களைச் சூறையாடியது. அம்மை நோய் வந்து ஐம்பதாயிரம் பேர் இறந்தனர். காட்டுக்குள்ளிருந்த ஒநாய்க் கூட்டங்கள் பாரிஸ் நகரில் நுழைந்து, குழந்தைகளையும் பெண்களை யும் கொன்று இழுத்துக் கொண்டு ஓடின.

இவையாவும், மகாகவி வில்லன் பாரிஸ் மாநகரில் திருஅவதாரம் செய்தபோது தோன்றிய உற்பாதங்கள். குழந்தைக் கவிஞனின் பிஞ்சு விழிகள் இந்தக் கோரக் காட்சிகளை வியப்போடும் அச்சத்தோடும் பார்த்துப் பதிவு செய்து கொண்டன.

ஒரு கவிஞனின் வரலாற்றை அவன் படைத்த இலக்கியங் களில் இருந்தும், அவன் சமகாலக் கவிஞர்களின் படைப்புக் களிலிருந்தும் தேடிக் கண்டறிவது வழக்கம். வில்லனுடைய வரலாற்றை அவன் வாழ்ந்த காலத்துக் காவல் துறைக் குற்றப் பதிவேடுகளிலிருந்து, பிற்கால வரலாற்றாசிரியர் கள் தேடிக் கண்டறிந்தனர்.

1449 ஆம் ஆண்டு பி. ஏ. பட்டமும், 1452 ஆம் ஆண்டு எம். ஏ. பட்டமும் பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பெற்றான் வில்லன். 15 ஆம் நூற்றாண்டில் பாரிசில் ஏற்பட்ட புகழ் பெற்ற மாணவர் கிளர்ச்சி, இவன் பல்கலைக்கழக மாணவ னாக இருந்தபோதுதான் ஏற்பட்டது. அக்கிளர்ச்சியில் வில்லனுக்கு முக்கியப் பங்கு உண்டு.

பாரிஸ் நகரின் பெருந்தனக்காரர்களின் வீட்டுக்குமுன்

அடையாளக் கற்கள் (House Signs) நட்டிருப்பது அன்றைய 6uy)é4;lb. 8°uomʻlʻlq. tʼiet5Qujfi 60 (Madamoiselle-de-Bruyeres)

1 02