பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பவரின் வீட்டுக்கு முன்னால் நடப்பட்டிருந்த அடை யாளக் கல்லின் பெயர் The Devils Fart (காற்றுப் பரிதல்) என்பது. அந்த விநோதமான பெயர் மாணவர் கூட்டத்தின் எல்லையில்லாத கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியது. மாணவர்கள் பலர் ஓர் இரவில் கூட்டமாகச் சேர்ந்து அக்கல்லைப் பெயர்த்தெடுத்து சீன் நதிக்கரைக்கு இழுத்து சென்றனர். வேறொரு பிரபுவின் வீட்டு அடையாளக் கல்லையும் அங்கு இழுத்துக்கொண்டு வந்தனர். இரண்டை யும் அருகில் நட்டு ஒன்றில் மான் என்றும், மற்றொன்றில் கரடி என்றும் எழுதி இரண்டிற்கும் கேலித் திருமணம் (Mock Marriage) செய்து வைத்தனர். இத்தகைய விளை யாட்டு பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது. பாரிஸ் நகரக் காவற் படைத் தலைவர் ஒரு நாள் தமது படை யோடு மாணவர் இல்லங்களில் புகுந்து அவர்களைக் கடுமை யாகத் தாக்கியதோடு, அவர்கள் உடமைகளையும் பறிமுதல் செய்தார். இத்திருவிளையாடலின் கதாநாயகன் ஃப்ரான்சுவா வில்லன்தான். இக்கேலித் திருமண வழக்கு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் நீதித்துறைக்குமிடையே நீண்ட நாள் நடைபெற்றது.

வில்லன் இனிய குரல் வளம் படைத்த பாடகன். மதுப் புரைகளில் அவன் பாடுவான். எல்லோரும், அவன் கான மழையில் நனைந்து .ெ ம ய் மற ந் தி ரு க் கு ம் போது வில்லனின் கூட்டாளிகள் மதுக் குடங்களைக் களவாடிக் கொண்டு சென்று விடுவது வழக்கம்.

அன்றைய பிரெஞ்சுப் பல்கலைக்கழகக் கல்வி, சமயக்கல்வி (Theology) யாகத்தான் இருந்தது. பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவர்கள் ஓரளவு சமய அந்தஸ்துப் பெற்ற வர்களாகக் கருதப்பட்டனர். சமய குருக்களைப்போல் தலையலங்காரம் செய்து கொள்ளவும் பட்டதாரிகள்

1 0 3