பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுமதிக்கப்பட்டனர். பட்டம் பெற்றவர்கள் எந்தத் தவறு செய்தாலும், அவர்களை விசாரிக்கும் அதிகாரம், சமய நீதி மன்றங்களுக்கே இருந்தது. இந்தச் சலுகை, வில்லனுக்குப் பெரும் பாதுகாப்பாக அமைந்து விட்டது. பலமுறை வில்லன் திருட்டுக் குற்றங்களில் பிடிபட்ட போது, அவன் படித்த சமயக் கல்விக்காக இரக்கங் காட்டிச் சமய நீதி மன்றங்கள் அவனுக்கு மன்னிப்பு வழங்கின. இம்மன்னிப்புக்கள் வி ல் ல னை த் தி ரு த் த வில்லை. மேன்மேலும் தவறு செய்யும்படி தூண்டின.

1455-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5-ஆம் நாள் பாரிஸ் நகரில் கார்பஸ் கிறிஸ்டி (Corpus Christi) என்ற விழா நாள். வில்லன் தனது நண்பர் கூட்டத்துடன் செயிண்ட் பெனாய்ட் தேவாலயத்தின் வாசலில் அமர்ந்திருந்தான். அப்போது அப்பக்கமாக வந்த ஃபிலிப் செர்மாயி என்ற பாதிரிக்கும் வில்லனுக்கும் வாய்ச் சண்டை முற்றிக் கைகலப்பில் மு. டி ந் த து. செர்மாயி கையில் இருந்த குறுவாளால் வில்லன் முகத்தில் குத்தினர். வில்லனின் மேலுதடு கிழிந்து குருதி வழிந்தது. தாக்குதலுக்கு ஆளான வில்லன் குமுறி எழுந்து செர்மாயியின் வயிற்றில் தன் குத்து வாளைச் செலுத்தினன் ; ஒரு பெரிய கல்லை எடுத்துப் பாதிரியின் முகத்தில் அடித்தான். படுகாயம் அடைந்த பாதிரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டு, சில நாட்களில் இறந்தார். இந்த மோதலுக்கு மூலகாரணம், அப்போது வில்லைேடு அமர்ந்திருந்த 'சாபு என்ற சாயல் மயில்.

இந்த மோதலுக்குப் பிறகு வில்லன் தலை மறைவாகி விட்டான். நண்பர்களின் தீவிர மு ய ற் சி யா ல், இக்கொலை வழக்கினின்றும் வில்லன் மீண்டு மன்னிப்பும்

பெற்ருன்.

104