பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் குறும்புக்காரக் கூட்டாளி ஒருவன், எதிரில் வந்த செல்வாக்கு மிக்க சமயத்துறைத் தலைமை எழுத்தர் மாஸ்டர் ஃப்ரான்சுவா ஃபெர்பெக் என்பவரை வம்புச் சண்டைக்கு அழைத்தான். வாய்ச்சண்டை கைகலப்பாக மாறிக் கத்திக் குத்தில் முடிந்தது. காயம் பட்ட ஃபெர்பெக்கின் நினைவில் அப்போது நின்றவன் கவிஞன் வில்லன்தான். செய்யாத குற்றத்துக்காக இம்முறை வில்லன் சிறை செய்யப்பட்டான்.

வில்லனின் நண்பராகவும் சமயசஞ்சீவியாகவும் காவல்துறை யில் முக்கிய பொறுப்பாளராகவும் விளங்கிய ராபர்ட்-டிஈஸ்டர்வில்லி என்பவர் இப்போது ஒய்வு பெற்றுவிட்டார். புதிதாகப் பொறுப்பேற்றிருந்த காவல்துறைத் தலைவரின் கண்டிப்புக் கரங்களின் பிடி, வில்லன் மீது இறுக்கமாக விழுந்தது. நவேரிக் கல்லூரித் திருட்டு போன்ற பழைய குற்றங்கள் புத்துயிர் பெற்றன. வில்லன் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டான். இவ்வழக்கில், தான் குற்றமற்றவன் என்பதை விளக்கிப் பாராளுமன்றத்துக்குவில்லன் விண்ணப் பித்தான். தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஆனால் பத்தாண்டு காலம் நாடு கடத்தப்பட்டான். அதன் பிறகு பாரிஸ் குற்றப் பதிவேடுகளில் வில்லனைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

தூக்கு மேடைக் கைதியாக இருந்த சில நாட்களில், புகழ் மிக்க தனது நாலடிப் பாடல்களையும் (Quattain) கல்லறை வரிகளையும் (Willon's Epitaph) எழுதும் உள்ள உரம் பெற்றிருந்தான் வில்லன்.

1463 இல் நாடு கடத்தப்பட்ட கவிஞன் வில்லனுக்கு வயது 32 தான். ஆனால் வறுமையும் சிறையும் வயதுக்கு மீறிய முதுமையை அவனுக்கு வாரி வழங்கியிருந்தன. பிரெஞ்சு நாட்டின் கண்காணாத ஒரு மூலையில் பட்டினியிலோ,

10 7