பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"குயில் காட்டும்

கவிஞர்

' கவிஞன் தன் இ ன் ப துன்பங்களைத் தனிமையில் இருந்து தாகந் தீரப் பாடித் தீர்க்கும் தனிக்குயில்; அவன் அகிலத்தின் அங்கீகாரம் பெறாத ஆட்சிமன்ற உறுப் பினன் என்று ஆங்கிலப் புரட்சிக் குயில் ஷெல்லி குறிப்பிட்டான்.

' கவிஞன் ஒரு க ரு த் தி ன் முதல்வன் ; எந்தக் கருத்தையும் ஈடேற்றிச் செல்ல முன்னின்று நடத்தும் தானைத் தலைவன்’’’ என்று அமெரிக்கக் கவிஞன் வால்ட்விட்மன் குறிப்பிடுகிறான்.

பயித்தியக்காரனும், காதலனும் கவி ஞனும் ஒரே மாதிரியான கற்பனை வசப் பட்டவர்கள்; பயித்தியக்காரன், நரகத்தில் இருப்பதைவிட அதிகமான பிசாசுகளைக் கற்பனையில் கா ண் கிறான்; காதலன், எகிப்து நாட்டு நீக்ரோப் பெண்ணின் கரிய புருவத்தில், கிரேக்கப் பேரழகி ஹெலனின் அழகைக் காண்கிறான். கவிஞனோ, தன் சுழலும் விழிகளால் விண்ணையும் மண்ணை யும் அ ள க் கி றா ன் : கண்டறியாதன வற்றைக் க ற் பனை யி ல் காண்கிறான் ; இல் லா த வ ற் று க்கும் வாழ்வு கொடுக் கிறான்....... ... ' என்று நாடக மேதை ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகிறான்.

புதுவைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட பாவேத்தக் பாரதிதாசன் 97-ஆம் பிறந்த நாள் விழாக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. நாள் : 29.4.1987.