பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிரிலோ, தெருச் சண்டையிலோ அல்லது தன்னைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டபடி தூக்கு மேடையிலோ வில்லன் அநாதையாக இறந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

வில்லன் தான்தோன்றித் தனமானவன் , திருடன் ; தெருச் சண்டைக்காரன் ; காமுகன் ; கொலைகாரன் ; மேதை. வில்லனைப் போல் துாற்றுதலுக்கும் , பழிச் சொல்லுக்கும் ஆளான கவிஞன் உலகில் வேறு யாருமில்லை. அவன் படைப்புக் காலம் ஆறு ஆண்டுகள்தான். அவன் எழுதிய கவிதை 3000 வரிகள் தான். ஆனால் பிரெஞ்சு நாட்டிலும், உலகிலும் அவனுக்கு ஒப்பான கவிஞர்கள் மிகச் சிலரே.

வில்லன் 15 ஆம் நூற்றாண்டுப் பாரிஸ் வாசி. பாரிசின் ஜனசந்தடி மிக்க தெருக்களும், அன்றாட நிகழ்ச்சிகளும், ஆடம்பரமும், ஏழ்மையும், கேளிக்கையும், மடங்களும், மடத்துறவிகளின் போலித்தனமும் அவன் கவி ைத யி ன் கரு ப் பொருள் கள். பளிங்கு நீரோட்டத் தெளிவும், செதுக்கி எடுத்த சிற்பச் சொல்லாட்சியும், நகைச்சுவை யோடு கூடிய அங்கதமும் அவன் கவிதையின் சிறப்பம் சங்கள். அவன் படைப்புக்களில் மு. த லி ட ம் வகிக்கும் The Testament - என்ற கவிதை நெருக்கமாக அவனைப் பற்றியும், அவன் மனச்சாட்சியைப் பற்றி யுமே பேசு கின்றது. அதில் தன் குற்றங்களையும், தன் கழிவிரக்கத் தையும் வெளிப்படையாகப் பேசுகிறான் வில்லன். கீழ்க் கண்டவரிகள் அவன் உள்ளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

பேரரசன் அலெக்சாண்டர் மு ன் பு டயமிடிஸ் என்ற கடற் கொள்ளைக்காரன் , விலங்கு பூ ட் டப் பட்டு க் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறான்.

1 98