பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஏன் நீ ஒரு கடற் கொள்ளைக்காரனாக வாழ்கிறாய்?" என்று கேட்டார் அலெக்சாண்டர்.

டயமிடிஸ் பதில் சொன்னான் :

'என்னிடம் சிறிய கப்பல் மட்டுமே இருப்பதால் நான் கடற் கொள்ளைக்காரன் என்று அழைக்கப்படுகிறேன். உங்களிடம் இருப்பதுபோல் பெரிய படை இருந்தால் நானும் சக்கரவர்த்திதான் ! ஒருமனிதன் ஒழுக்கமாக இருப்பது அவன் வாழ்க்கை வசதியைப் பொருத்தது. வ று ைம யி ல் ஏது ஒழுக்கம் ? " என்றான் அவன். அலெக்சாண்டர் அவனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதி களைத் தந்து நல்லவனாக வாழ வைத்தார்.

ஆண்டவன் எனக்கு அன்புகாட்டும் மற்றொரு அலெக்சாண்டரை அனுப்பி வைக்கட்டும். நானும் திருந்தி வாழ்கிறேன். அதையும் மீறித் தவறு செய்தால் - நானே தீக் குளித்து இறக்கத் தயங்க மாட்டேன் - என்று பாடுகிறான் வில்லன்.

அவன் படைத்தவற்றுள் எல்லாரும் விரும்பிப் படித்துப் பாராட்டுவது தொன்மை மகளிர் ( Of The Ladies of Bygone Times ) என்ற சிறிய கவிதை. அதன் ஒவ்வொரு வரியும் உணர்ச்சி மிக்க-வரலாற்றுச் சிறப்பு மிக்க-இலக்கிய மேற் கோள்களைக் கரு க் .ெ கா ண் டு காட்சியளிக்கிறது. அதைப் படிக்கும் எவரும் அதில் பொதிந்து கிடக்கும் கருத்தழகை நீண்ட நேரம் அ ைச போ ட் டு மெய் மறக்காமல் இருக்க முடியாது.

ஆடரங்கத்தில் ஏறி

ரோமாபுரி ஆடவரின் நெஞ்சத்தை

ஆட்டிப்படைத்த ஃப்ளோரா,

I 09