பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்ட போது அவன் தாய் நீ எப்படியாவது இந்தப் படிப்பை (Painting) முடித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் 1, என்று வருத்தத் தோடு சொன்னாள்.

அதற்கு அவன் சொன்னான் :

'ஒவியத்தொழில் செய்யத் தனியாக ஒரு கூடமும் (Studio), திரைச் சேலைகளும், வண்ணங்களும், தூரிகைகளும் இன்னும் பலவும் தேவைப்படும். ஆனால் கவிதை எழுத பழைய நோட்டுப்புத்தகம் ஒன்று இருந்தால் போதும்; எந்த இடத்திலும் உட்கார்ந்து கொண்டு எழுதலாம். எனவே நான் கவிஞனாகப் போகிறேன்

சொன்னபடி மாகவிஞன் ஆகிவிட்டான்.

மாஸ்கோ மன்றங்களில் அவன் தனது கவிதைகளைப் படித்தபோது, இளைஞர் பட்டாளம் உணர்ச்சி வசப்பட்டு மெய் மறந்த ஈடுபாட்டோடு, ஆரவாரம் செய்யும். ஆனால் அதே சமயத்தில் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு அவன் கவிதைக் குறியீடுகள் எதைக் குறிப்பிடுகின்றன என்று புரியாது; அவன் கருத்துக் கள் தீவிரமானவையா, நகைச் சுவையானவையா என்று புரியாமல் விழிப்பர். புரியாத இவன் குறியீட்டுக் கவிதை கள் பற்றி அவன் தாய் ஒரு முறை கேட்டபோது மாயகோவ்ஸ்கி சொன்னான் :

'எல்லாருக்கும் புரியும்படி தெளிவாக எழுதி விட்டால், நான் மாஸ்கோவில் இருக்க மாட் டேன். சைபீரியாவில் கண் காணாத இடத்திற்கு நாடு கடத்தப்படுவேன். காவல் துறையின் கழுகுக் கண்கள் எப்போதும் என் மீது வட்ட மிட்டுக் கொண்டிருக்கின்றன. நான் எ ப் படி

1.I 4,