பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிப்படையாகப் பாடமுடியும்? அடக்கு முறை

ஒழிக!' - மாயகோவ்ஸ்கி ருசிய நாட்டில் முக்கியமான நகரங்களுக் கெல்லாம் சென்று மாலைக் கூட்டங்களில் தனது கவிதை யைப் படிப்பது வழக்கம். இத்தகைய கூட்டம் மாஸ் கோவில் அடிக்கடி நடைபெறுவதுண்டு. அக்கூட்டங்களில் மாயகோவ்ஸ்கியின் சகோதரி அடிக்கடி கலந்து கொள் வாள். ஒரு முறை அவன் தாய், தானும் அக் கூட்டத் தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தபோது அவன் சொன்னான் :

நான் என் கவிதையைக் கூட்டங்களில் படிக் கும் போது என் எதிரிகள் என்னை இகழ்ந்து பேசுவார்கள். எதிர்த்தாக்குதல் நடத்துவார் கள், உன்னால் அ ைத த் தாங்கிக் கொள்ள முடியாது; உள்ளம் உடைந்து வருந்துவாய். எனவே நீ வரவேண்டாம்!'

உணர்ச்சி வசப்படும் கவிஞர்கள், காதலைப் பொறுத்த வரையில் எப்போதும் கட்டுப்பாடற்றவர்கள். சந்த வேறுபாடுகளும், சாயல் மயில் வேறுபாடுகளும் அவர் களால் தவிர்க்க முடியா த வை. பைரன், ஷெல்லி, கெதே, போதலேர், பாப்லோ நெருடா எல்லாரும் காதல் மன்னர்களே! மாயகோவ்ஸ்கி மட்டும் அதற்கு விதிவிலக்கா? மாயகோவ்ஸ்கியின் வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ பூந்தோட்டங்கள் ! குளிர் அரு விகள் ! இளமரக் காடுகள் !

இவன் ஒரு பெண்ணை முழு மூ ச் சோ டு காதலிக்கத் தொடங்கி னா ல் , உடனே அவளுக்குத் திருமணம் வேறொரு செல்வச் சீமானோடு முடிந்துவிடும். இது இவன் ராசி. முதலில் எல்சா என்ற பெண்ணைக் காதலித் தான்; அவள் லூயி அரகான் என்ற சீமானை மணந்து

1 I 5