பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டாள். பின்னர் அவள் த ம க் ைக லில்லி என்பவளைக் காதலித்தான்; அவள் ஆசிப்பிரிக் என்ற சீமானை மணந்து கொண்டாள். எனவே திருமணமான லில்லிபிரிக்கையே தொடர்ந்து காதலித்தான். அவர்கள் காதல் விவகாரத்தில் சிக் கல் ஏற்பட்ட போதெல்லாம் தற்கொலை செய்து கொள்வதாகப் பல முறை மிரட்டி யிருக்கிறான் மா யகோ வ் ஸ் கி. அந்தச் சமயங்களில் அச்சிக்கல்களைத் தீர்த்துச் சமரசம் செய்ய அவர் க ள் இரண்டு பேருக்கும் தூதுவனாக இருந்து உதவியிருக்கிறான் லில்லியின் கணவனான சீமா ன் பிரிக். உலகக் காதல் வரலாற்றில் குறிப்பிடத் தக்க பொறுமைசாலி இந்தப் பிரிக் சீமான்! இவர்கள் காதல் வி வ கார ம் இப்படி இழுபறியாகப் பத்தாண்டுக் காலம் நீடித்தது.

நமக்கு மாயகோவ்ஸ்கியின் காதல் விவகாரம் அவ்வளவு முக்கியமில்லை. இக் காதல் தோல்வியினால் ஏற்பட்ட தாக்கம் அவன் இலக்கியத்தைப் பெரிது ம் பாதித்து, ருசிய இலக்கியத்திலும் பெரிய மாறுதலைத் தோற்று வித்தது.

காதல் கவிதைக்கு இ லக் கி ய உலகில் எப்போதும் வரவேற்பு அதிகம். அதுவும் கண்ணிரோடு வழிந்து வரும் காதற் கவிதைக்கு எழுதுபவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வசந்த வரவேற்பு உண்டு. மாயகோவ்ஸ்கியின் காதல் தோல்வி பெற்றெடுத்த "காற்செராய் அணிந்த மேகம் (Cloud in pants) இது' (lt) அன்பு லில்லிக்குப் பதில் கடிதம் (Lily Deart in Lieu of A Letter) என்ற கவிதைகள் மூன்றும் உணர்ச்சி மிக்க காதற் கவிதைகள். இவற்றுக்கு ஒப் பா. க ஒரு சிலவற்றையே உலக இலக்கியத்தில் தேடிப் பிடிக்க முடியும்.

I I 6