பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாப்லோ நெருடா

எரிமலையும், கனமழையும் சூழ்ந்த சிலி நாட்டின் தெற்குப்பகுதியில் ஒர் ஏழை ரயில்வேக் கூவிக்கு மகனாகப் பிறந்து, துன்பத்தில் வளர்ந்து, உ ல க நாடுகள் பலவற்றுள் சிலி நாட்டுப்பிரதிநிதி (Consul) யாகப் ப த வி வகித்து நோபெல் பரிசு பெற்ற பெ ரு ங் கவி ஞ னா க இந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்தவர் பாப்லோ நெருடா.

பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் பாப்லோ. தன் மகன் பட்டம் பெற்று ஒரு பெரிய அதிகாரியாக வரவேண்டும், என்பது இவர் தந்தையின் விருப்பம்; இவர் கவிஞனாவதை அவர் விரும்ப வில்லை. எனவே தம் .ெ ப ய ரே டு நெ ரூ டா என்ற வேற்று மொழிச் சொல்லையும் சேர்த் து க் கொண்டு "பாப்லோ நெருடா என்ற புனைபெயரில் தம் முதல் கவிதை நூலை வெளியிட்டார். தந்தையை ஏமாற்றுவதற்காகச் செய்து கொண்டதே இப்பெயர் மாற்றம். தமது பதினான்காம் வ ய தி ல் , செக்நாட்டுப் பத்திரிகை ஒன்றைப் புரட்டிக் கொண் டிருந்தபோது, அதில் கா ண ப்ப ட் ட 'நெருடா என்ற பெயரை இவர் தம்

1 2 3