பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்கள், எப்போதும் தொலைவில் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும். உணவுவிடுதி, மதுப்புரை, (bar), இசையரங்கு ஆகிய இடங்களில் கையில் ஒரு பத்திரிகைக் கற்றையுடன் ஒசையின்றித் திரிந்துகொண்டி ருப்பார் வால்டிவியா. நண்பர்கள் அன்புள்ள பினமே!’ (Deat Corpse) என்று ஆசையோடு அவரை அழைப்பர். அவர் அதற்காக முகஞ்சுழிக்க மாட்டார்; சிலசமயங் கள்ளில் புன்னகைசெய்து அந்த வரவேற்பை ஏற்றுக்கொள்

፴፬ ፳፻፹፫ ,

யா ப்லோ நெருடாவும் அவர் நண்பர்களும் அவரை :பினமே! இன்று எங்களுடன் தங்கி விருந்து சாப்பிட்டு விட்டுச் செல்லவேண்டும்' என்று அடிக்க டி அழைப் பதுண்டு. அவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார். "பிணம் கற்பனைத்திறன் மிக்க சிறந்த கவிஞர். மிகச் சுருக்கமாகவும், நிதானமாகவும், பேசும் இயல்புடையவர். ஆனால் அவர் பேசும் சில சொற்களும் நினைவில் நிற்கும் படி இருக்கும்.

பாப்லோ நெருடாவின் நண்பர்கள் ஆண்டு தோறும் நவம்பர் முதல் நாள் இரவு இந்தப் பிணக் கவிஞருக்கு, சிறப்பான விருந்தொன்று கொடுப்பது வழக்கம். "பிணம், மரியாதைக்குரிய தமது ஆசனத்தில் நடுநாயகமாக வீற்றி ருந்து விருந்து சாப் பி டு வார் . நள்ளிரவு சரியாக 12 மணிக்கு எல்லோரும் விடுதியை விட்டு வெளியில் வந்து இடுகாட்டுக்கு அ ைம தி யு டன் ஊர்வலமாகச் செல்வர். அமைதியான அந்த நடுநிசியில் யாராவது ஒரு நண்பர் பிணமான அக்கவிஞரின் பெருமைகளைப் பேசுவார். பிறகு எல்லாரும் பிணத்திடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்புவர். பிணம் மட்டும்’ ஒருகல்லறையில் தனியாக அமர்ந்திருப்பார். பசியெடுத் தால் ஏதாவது வாங்கிச்சாப்பிடக் கொஞ்சம் சில்லறையும்

星24