பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலகம் மிகப்பெரியது. கவர்ச்சியானது, ஐரோப்பிய நாடுகளின் பல பகுதிகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட பல மொழி இலக்கியச் செல்வங்கள் வரிசைப் படுத்தப்பட்டு, கண்ணுடிச் சட்டமிட்ட மஹாகனி பீரோவில் அடுக் கி வைக்கப்பட்டிருந்தன. அந்நூலகத்தின் தளம் சிறுத்தைத் தோல்களினல் தைக்கப்பட்ட ஒரே விரிப்பால் மூடப் பட்டிருந்த காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அச்சிறுத்தைத் தோலின் புள்ளிகள் அவ்விரண்டு மகா கவிகளின் காலடியில் புஷ்பராகம் போல் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.

அர்ஜென்டைன நாட்டு அரசியலையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த நடாலியா பொடானியாவின் எதிரில் இருந்த மேசையின் இரு பக்கத்தில் நெருடாவும் லார் கா வும் அமர்ந்திருந்தனர். நடுவில் அந்த நாட்டுப் பெண் கவிஞர் ஒருவரும் அமர்ந்திருந்தார். இளவேனில் நங்கை யான அவள், தன் பசிய - பசித்த - கண்களால் நெருடா வையே அதிகம் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் அவளைச்சுற்றி ஒரு காந்த மண்டலத் தையே தோற்றுவித்துக் கொண்டிருந்தன. அவள் பெரு மூச்சு நெருடாவின் உள்ள நெருப்பைப் போர்த்திருந்த சாம்பலை ஊதிக் கன ன்று எரியச் செய்து கொண் டிருந்தது. தோலோடு சேர்த்துச் சுட்டெடுத்த மாட்டி றைச்சியின் மணமும், மசாலையின் மணமும், சுற்றியிருந்த 'சொகுசு வாழ்க்கையின் மணமும் கவிஞர்களை லேசாக்கி

வானில் மிதக்கவிட்டன.

விருந்து முடிந்ததும் கவிஞர் மூவரும் சிரிப்பும், கெக் கலிப்புமாகத் தோட்டத்தின் கோடியில் இருந்த நீச்சல் குளத்தை நோக்கிச் சென்றனர். லார்கா எப்போதும் போல் ம கி ழ் ச் சி யாக ப் பேசிக்கொண்டு முன்னால் சென்ருர் மகிழ்ச்சியே லார்காவின் உடம்பு.

127