பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள். பாப்லா நெருடா நோபெல் பரிசு பெற்ற புரட்சிக் கவிஞர். தமது கவிதையைப் பாடிக்கொண்டே தூக்கு மேடையை முத்த மிட்ட தென்னாப்பிரிக்கக் கருப்புக் குயிலைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். இவர்கள் எதிரிகளால் வளைக்க முடியாத கற்றுாண்கள் ; முறிந்து தம் மூச்சை முடித்துக்கொண்டார் கள். பாவேந்தர் பாரதிதாசனும் சிற்பக் கவிதைத் துரண் தான் ; ஆனால் இவர் முறியவில்லை. தமிழ்க்கோவிலின் ராஜகோபுரத்தைத் தாங்கிய வண்ணம் ஊன்றி நிற்கிறார்.

பாவேந்தர் பாரதிதாசன் தனிப்பட்ட மனிதர் அல்லர் ; அவர் ஒர் இயக்கம். அவர் ஒரு தனிப்பட்ட கவிஞர் அல்லர்; அவரைக் கவிஞரின் அணி வகுப்பு என்றோ, கவிஞரின் ஊர்வலம் என்றோ குறிப்பிடவேண்டும். அவர் ஒரு பஜனை பாடும் தீவிர ஆத்திகராக, கடமையுணர்ச்ச்சி மிக்க ஆசிரியராக, தீவிர தேசிய வாதியாக, கொள்கைப் பிடிப்புமிக்க அரசியல் வாதியாக, சலிப்பில்லாத சமுதாய சீர்திருத்த வாதியாக, நாடக ஆசிரியராக, திரைப்பட எழுத்தாளராக, தெ ா ழி ற் சங்க வாதியாக, எல்லா வற்றுக்கும்மேல் உலகளாவிய ஒரு புரட்சிக் கவிஞராகத் தமது வாழ்க்கையில் விளங்கியிருக்கிறார். இத்தனை துறைகளிலும் தமது முத்திரை பதித்த வேறு ஒரு கவிஞரைத் தமிழக வரலாற்றில் காணமுடியாது. வெண்மையான தூய ஒளிக்கற்றை ஒரு மு ப் பட் ைட க் கண்ணாடியில் நுழைந்ததும் பலவித வண்ண வேறுபாடுகளுடன் ஒலிச் சிதறல் ஏற்படுவதைக் காண்கிறோம். ' கருப்புக்குயிலின் நெருப்புகுரல் ' என்ற இந்நூலில் பாவேந்தரின் பல்வேறு பட்ட ஒலிச்சிதறல்களையும், பரிமாணங்களையும் துல்லிய மாகக் காணமுடிகிறது.

பெரியம்மாவின் அன்பில் வேறுபாடுகண்ட பதின்மூன்று வயதுச் சுப்புரத்தினம்

I I