பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீச்சற் குளத்தருகில் ஒரு கூம்புக்கோபுரம் இருந்தது.

அதன் மீது மூன்று கவிஞர்களும் ஏறினர். வெண்மை. யான அக்கோபுரத்தின் உச்சி விளக்கொளியில் முத்தாகக்

காட்சியளித்தது. உச்சியில் இருந்த வேலைப்பாட்டுடன் கூடிய சாளரங்கள் வழியாகக் கவிஞர்கள் வெளியுலகை எட்டிப் பார்த்தனர். நீச்சற்குளத்தில் பிரதிபலித்த ஒளிக்

கண்கள், கீழிருந்து இவர்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தன. மொய்த்திருக்கும் விண்மீன்களோடு அவர்களை ப் போர்த்து மூழ்கடிப்பதுபோல், இரவு

நெருக்கமாக அவர்கள் மீது தொங்கிக் கொண்டிருந்தது.

கிதாரோடு கூடிய பாட்டிசை அலையாகக் காற் றி ல்

மிதந்துவந்து, அவர்கள் காதில் விளையாடியது.

மூன்று விதமான மூன்று கவிஞர்கள் : நெருடா அருகில் இருந்த தங்கக் கவிதைக் கொடியை மெதுவாகத் தம் நெஞ்சில் படரவிட்டு, அவள் வாயிலிருந்து வேரோடு. ஒரு முத்தம் பறித்தார்; கொடி சாய்ந்தது. அவள் மேலாடையை நெருடா நீக்கத் தொடங்கினார். அங்கு நடப்பதை ந ம் ப முடியாமல் வியப்போடு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த லார்காவை நோக்கி, 'வெளியே போய்யா ய்ாரும் மேலே வராம பார்த்துக்க!' என்று சத்தமிட்டார் நெரூடா.

நட்சத்திர வானத்தை ஒரு பெரிய பூவாக்கி இருவரும்

தேனருந்திய வேளையில் காவல்பணியில் ஈடுபட்டிருந்த

கவிஞர் லார்கா இருட்டில் மோதிப் படியில் உருண்டார்.

பாப்லோ நெருடாவும் அப்பளிங்குச்சிலையும் அவசரமாக

எழுந்து ஓடிவந்து லார்காவைத் து க் கி. நிறுத்தினர். அதன்பிறகு லார்கா இரண்டுவாரம் நொண்டிநொண்டித்

தான் நடந்தார்.

12:8;